இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திருமண
விருந்து என்பது அளவு கடந்து சாப்பிடுவதற்கு என்று நினைத்துக்கொண்டிருக்கையில், விருந்தில்
கலந்துகொண்ட பெண்ணின் மகன் அதிகளவு சாப்பிட்டதற்காக மணப்பெண்ணின் வீட்டார் பில் அனுப்பியுள்ள
சம்பவம் நடந்துள்ளது.’தி சன்’ இணையதளம்
வெளியிட்டுள்ள செய்தியின் படி அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த
அனுபவம் குறித்து ரெடிட் வலைதளத்தில் எழுதி மற்றவர்களின் கருத்துக்களை கேட்டுள்ளார்.
அதன்படி, அந்த பெண்ணும் அவரின் 16 வயது மகனும் சமீபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். மணப்பெண் வீட்டார் நடத்திய இந்த திருமணத்தில் குழந்தைகளுக்கு தனி உணவு மெனுவும், பெரியவர்களுக்கு தனி உணவு மெனுவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால்,
தனது மகன் 16 வயதை எட்டியுள்ளதால் பெரியர்களுக்கான உணவையே இருவரும் தேர்வு செய்து சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் வீட்டுக்கு திரும்பி வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அதன் பின்னர்
மணப்பெண்ணின் வீட்டில் இருந்து அந்தப் பெண்ணுக்கு ஒரு கடிதமும், பில்லும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.அதில்,
உங்களது மகன் குழந்தைகளுக்கான மெனுவை தேர்வு செய்யாமல், பெரியவர்களுக்கான உணவை சாப்பிட்டுள்ளார்.
18
வயது வரை உள்ளவர்கள் குழந்தைகள் மெனுவை சாப்பிட வேண்டும் என்பதால், அதற்கான கூடுதல்
கட்டணத்தை சமையல் ஏற்பாடுகளை செய்தவர் எங்களிடம் பெற்றுவிட்டார். எனவே நீங்கள் அந்த
தொகையை அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.திருமண நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான
மெனு என்றதும் நான் 12 வயதுக்கு குறைவானவர்களுக்கு என்று நினைத்தேன்.
ஆனால்,
இப்படி அவர்கள் பணம் கேட்டு பில் அனுப்புவார்கள் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்று
பாதிக்கப்பட்ட பெண் வலைதளத்தில் புலம்பியுள்ளார். அவருக்கு பலரும் ஆறுதல்களையும், ஐடியாக்களையும்
சொல்லி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக