இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திருச்சியில்
இருந்து கடலூர் செல்லும் பேருந்தில் பயணம் சென்ற போலிஸ் ஒருவர் டிக்கெட்
எடுக்காமல் பயணம் சென்றதைத் தட்டிக்கேட்ட நடத்துனர் நெஞ்சுவலி வந்து
மரணமடைந்துள்ளார்.
திருச்சியில் கடலூர் செல்லும் அரசுப்பேருந்தில் நேற்று முன் தினம் திட்டக்குடி காவலர் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது அவரிடம் டிக்கெட் கேட்ட நடத்துனர் கோபிநாத்திடம் தானொரு காவலர் என சொல்லியுள்ளார். சீருடை அணியாமல் இருந்த அவரிடம் அடையாள அட்டையை நடத்துனர் கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.
ஒரு கட்டத்த்தில் வாக்குவாதம் முற்ற நடத்துனர் கோபிநாத் அந்த இடத்திலேயே நெஞ்சு வலி வந்து மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் போலிஸ்காரரை மடக்கி வைத்திருக்க தகவலறிந்த போலீஸார் வந்து பழனிவேலைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக