இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
களைகட்டி
காணப்படும் கொடிவேரி அணை, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ளது.
அருவி போல் கொட்டும் தண்ணீரின் அழகும், வனப்பும் நிறைந்து சுற்றுலா பயணிகளை
பரவசப்படுத்துகிறது.
சிறப்புகள் :
இது
ஒரு பொழுதுப்போக்கு சுற்றுலாத்தலமாகும். இங்கு பவானி ஆற்றின் குறுக்கே
கட்டப்பட்டுள்ள தடுப்பு அணை, நீர்த்தேக்கம் மற்றும் இதன் இயற்கையான சுற்றுச்சூழல்
பகுதி அனைத்தும் காட்சிக்கினிய இடமாக திகழ்வதுடன் உள்ள ர் சுற்றுலா பயணிகளுக்கு
பொழுதுப்போக்கு சிறப்பிடமாகவும் விளங்குகிறது.
சுற்றுலாத்துறை
மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக குழந்தைகளுக்கான விளையாட்டு திடல், படகு
இல்லம், கழிப்பிட வசதிகள், உடை மாற்றும் அறைகள் எனப் பல வசதிகள்
செய்யப்பட்டுள்ளது.
அணையின்
நுழைவுவாயிலில் குளிர்ச்சியான இளநீர், நுங்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும்,
காரமான மசாலாவுடன் பொரித்த மீன்கள், சுடச்சுட வறுவலாக கிடைக்கிறது.
அணைக்கு
வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 15க்கும் அதிகமான பரிசல்கள் இயக்கப்படுகிறது.
ஆற்றில் சுமார் 1கி.மீ. தொலைவுக்கு அழைத்துச் செல்கின்றனர். இதனால் கண்ணுக்கு
இதமாக இயற்கையை ரசிக்கலாம்.
தமிழ்
திரைப்படங்கள் இங்கு பல காட்சிகளை படமெடுத்துள்ளனர். தமிழ் மொழித் திரைப்படமான
சின்னத்தம்பியின் சில காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டன.
சுற்றுலா
பயணிகளுக்கு புத்துணர்வை அளித்து, உடல் சூட்டைப் போக்க மசாஜ் செய்பவர்களும்
இப்பகுதியில் இருக்கிறார்கள்.
சுமார்
ஒரு மணி நேர எண்ணெய் மசாஜுக்குப் பிறகு அருவி போல் கொட்டும் அணை நீரில் குளிப்பது,
உடலில் குடி கொண்ட சோர்வும், வலியும் நீக்கி ஒருவித புத்துணர்வை ஏற்படுத்துகிறது.
எப்படி செல்வது?
ஈரோடு,
கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளிலிருந்து பேருந்து வசதிகள்
உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
இதர சுற்றுலாத்தலங்கள் :
பவானிசாகர்
அணை.
பவானி
கூடுதுறை காவிரி.
காளிங்கராயன்
அணை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக