இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திருவண்ணாமலை
மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலையம்மாள். இவரின் கணவர்
முருகன் சென்னையில் மேஸ்திரி வேலை செய்துவருகிறார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை,
மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சோலையம்மாள் மீண்டும்
கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு கடந்த 14-ம் தேதி திடீரென பிரசவ வலி ஏற்படவே, ஆரணி
அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சோலையம்மாளுக்கு, 5-வதாக சுகப்
பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையிலிருந்து கடந்த 16-ம்
தேதி சோலையம்மாள் குழந்தையுடன் மாயமாகியிருக்கிறார்.
அவரை
மருத்துவர்களும் நர்சுகளும் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால், அவரைக் காணவில்லை.
இதையடுத்து, ஆரணி காவல் நிலையத்தில் மருத்துவமனை தரப்பில் புகார் அளித்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில், சோலையம்மாள் குழந்தையுடன் சென்னையில் தலைமறைவானது
தெரிந்துள்ளது. கடந்த 18-ம் தேதி இரவு சோலையம்மாள், சேவூரில் உள்ள அவருடைய தங்கை
மலரிடம் போனில் தொடர்புகொண்டு குழந்தை இறந்துவிட்டதாகவும், அந்தக் குழந்தையை
சென்னையில் அடக்கம் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்போது
அவர்கள், `நீ ஆஸ்பத்திரியில சொல்லாம போய்ட்டே.. அதனால இங்கே ஒரே பிரச்னையா இருக்கு.
நீ வீட்டுக்கு வந்துடு. எல்லாத்தையும் சரி செய்துவிடலாம்’ என்று கூறி சோலையம்மாளை
சேவூருக்கு வரவைத்துள்ளனர். இதையடுத்து, அவரும் 28-ம் தேதி சேவூருக்கு வந்து
நடந்தவற்றை வி.ஏ.ஓ-விடம் கூறியுள்ளார்.
இதையடுத்து,
வி.ஏ.ஓ ஆரணி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார். அங்கு விரைந்த போலீஸார்,
சோலையம்மாளை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில்
தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சோலையம்மாள் கொடுத்த வாக்குமுலம் அதிர்ச்சி
அடையவைத்துள்ளது
சோலையம்மாள்
கொடுத்த வாக்குமூலத்தில், ``எனக்கும் என் கணவரின் அண்ணன் பாபுவுக்கும் நீண்ட
நாள்களாக பழக்கம் இருந்தது. கணவர் வேலைக்குப் போகும் சமயத்தில் நாங்கள் இருவரும்
தனிமையில் சந்தித்துக்கொள்வோம். எங்கள் நெருக்கத்தால் பிறந்ததுதான் இந்தக்
குழந்தை. நான் கருவுற்ற உடனேயே சந்தேகம் வராமல் இருக்க என் கணவருடன் நெருக்கமாக
இருந்தேன். அதனால் அவருக்கு சந்தேகம் வரவில்லை. அதன்பிறகு எனக்கு குழந்தை
பிறந்தது. அப்போது பாபுவின் முக ஜாடையில் குழந்தை இருந்ததால் எனக்குப் பயமாக
இருந்தது.
இருந்தாலும்,
என் கணவருக்கு சந்தேகம் வந்துவிடுமோ என்று எண்ணி விஷயத்தை பாபுவிடம் சொன்னேன்.
அவரும், `பிறந்தது பெண் குழந்தைதானே; சாகடித்துவிடலாம்’ என்று கூறினார். நாங்கள்
இருவரும் ஒன்றுசேர்ந்து என் கணவருக்குத் தெரியாமல் குழந்தையின் கழுத்தை நெரித்துக்
கொலைசெய்து, ஒரு துணியில் கட்டி சேவூர் வயல்வேலி முள் புதரில் புதைத்துவிட்டோம்.
பின்பு நாடகமாடினோம். ஆரணி மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் புகார் கொடுக்காமல்
இருந்திருந்தால், இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் மறைந்துபோய் இருக்கும்’’ என்று
கூறி போலீஸாரை அதிரவைத்திருக்கிறார் சோலையம்மாள்.
வாக்குமூலத்தின்
அடிப்படையில் சோலையம்மாள் மீதும் பாபு மீதும் கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இன்று புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் பிணத்தை தாசில்தார் முன்னிலையில் தோண்டி
எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக