
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சவுதி:
ஒரு பக்கம் சுற்றுலா பயணிகளுக்கு முதல்முறையாக விசா வழங்குவதற்கு சவுதி அரசு
முன்வந்துள்ள நிலையில், மற்றொரு பக்கம் பொது இடத்தில் இறுக்கமாக உடை அணிந்தாலோ,
அல்லது முத்தம் கொடுத்துக்கொண்டாலோ அபராதம் விதிக்கப்படும் என்று அரசு
அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்துறை அமைச்சகம்
நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இது போன்ற உத்தரவுகள் வெளியாகியுள்ளது.
இதுவரை,
பணி நிமித்தமாக செல்வோர் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு மட்டுமே சவுதி அரசு
விசா வழங்கி வந்தது. முதல் முறையாக, சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்க முன்
வந்துள்ள, நிலையில், இந்த கட்டுப்பாடுகளையும் சேர்த்தே அந்த நாட்டு அரசு
வெளியிட்டுள்ளது.
முட்டி மறைக்கப்பட வேண்டும்
சவுதிக்கு
வரும் சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள சட்ட நடைமுறைகளை, அறிந்து கொள்ள வேண்டும்.
பெண்கள் தங்கள் தோள்பட்டைகள் மற்றும் முட்டி உள்ளிட்ட பகுதிகளை மூடும் வகையில் ஆடை
அணிந்திருக்க வேண்டும்.
19 வகை கட்டுப்பாடுகள்
ஆண்களோ
அல்லது பெண்களோ யாராக இருந்தாலும் இறுக்கிப் பிடித்துக் கொள்ள கூடிய அளவுக்கான
ஆடைகளை அணியக் கூடாது. மோசமான வார்த்தைகள் அல்லது படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை
அணியக்கூடாது. இவ்வாறு 19 வகையான கட்டுப்பாடுகளை சவுதி அரசு விதித்துள்ளது.
சுற்றுலா
அதே
நேரம் இதை மீறினால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பது இன்னும் தெளிவு
படுத்தப்படவில்லை. சவுதி அரேபியாவில் சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானவை. அங்கு
அது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே சுற்றுலா பயணிகள் வருகை எதிர்பார்த்த
அளவுக்கு இல்லை.
கச்சா எண்ணை
ஆனால்
2030ஆம் ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணையால் கிடைக்கக்கூடிய வருவாய் பெருமளவு
குறைந்துவிடும் என்பதால் சவுதி அரேபியா தனது சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்தி
அதன்மூலம் வருவாய் ஈட்டும் திட்டத்தில் உள்ளது. இந்த நிலையில்தான் சுற்றுலா
பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்பது முக்கியமானதாகப்
பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக