
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சென்னையில் வீட்டுக்கு அருகாமையில் சாலையோரமாக நிறுத்தி
வைத்திருந்த புதிய காரில் ரூ.88,000 மதிப்புள்ள 4 சக்கரங்களை கழற்றி திருடிச்
சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை பாடி டி.வி.எஸ் காலனியைச் சேர்ந்தவர் மகேஷ் பாபு. டி.வி.எஸ்
நிறுவனைத்தில் உதவி டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
சரியாக 30
நாட்களுக்கு முன்பு புதிய கார் ஒன்றை மகேஷ் பாபு வங்கிக் கடனில்
வாங்கியுள்ளார். நேற்றிரவு பாடி டி.வி.எஸ் நகரில் உள்ள இவரது வீட்டின்
அருகில் சாலையோரமாக காரை நிறுத்தி இருந்தார்.
இன்று காலை மகேஷ் பாபுவின் தாயார் கோவிலுக்கு செல்லும் போது
பார்த்த போது காரின் 3 டயர்களையும் யாரோ கழற்றி திருடிச் சென்று இருப்பது
தெரிந்தது. அதிர்ச்சியடைந்து மகேஷ்பாபுவிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட
நிலையில்,போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதே பகுதியில் உள்ள
கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக