Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 4 அக்டோபர், 2019

மணிரத்னம் உள்ளிட்ட 50 திரை பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு!

மணிரத்னம் உள்ளிட்ட 50 திரை பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு!



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


நாட்டில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கு கோரி திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கடந்த ஜூலை 24-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.
மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், கொங்கொனா சென் சர்மா, சவுமிதா சாட்டர்ஜி உள்பட 50 திரைப் பிரபலங்கள் கூட்டாகச் சேர்ந்து அந்த கடிதத்தில் நீண்ட கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில் பிரபலங்கள் குறிப்பிட்டதாவது,“நாட்டில் மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, அர்பன் நக்சல் என முத்திரை குத்தப்படுவதை ஏற்க முடியாது. எந்த ஒரு குடிமகனும் தமது சொந்த தேசத்தில் உயிர் அச்சத்துடன் வாழக்கூடாது” என்பது உள்ளிட்ட பல கருத்துகளை குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று பீகாரின் முசாபர்பூரில் ராம்சந்திர குஹா, மணி ரத்னம் மற்றும் அபர்ணா சென் உள்ளிட்ட 50 பிரபலங்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உள்ளூர் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் இவர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார்.
ஓஜா-வின் மனுவின் மீது நீதிபதி சூர்யகாந்த் திவாரி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்ட 50 பேர் மீதும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனுவில், நாட்டின் உருவாக்கத்தை சீர்குலைத்ததாகவும், பிரதமரின் செயல்திறனுக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 
இதன் அடிப்படையில், தேசத் துரோகம், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!