Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 அக்டோபர், 2019

பாகிஸ்தானில் ஆட்சிக்கவிழ்ப்பு? ராணுவத் தளபதி ரகசிய சதித்திட்டம் எனத் தகவல்

பாகிஸ்தானில் ஆட்சிக்கவிழ்ப்பு? ராணுவத் தளபதி ரகசிய சதித்திட்டம் எனத் தகவல்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


பாகிஸ்தானில் (Pakistan) இம்ரான் கானின் (Imran khan) தலைமையிலான ஆட்சி கவிழ்க்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் பஜ்வா (Qamar Javed Bajwa) உத்தரவின் பேரில் 111 படைப்பிரிவு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பில் எப்போதும் 111 படைப்பிரிவுகள் மட்டுமே முக்கிய காரணமாக இருந்துள்ளது என்பது நிபுணர்கள் கூறிகின்றனர். ஜெனரல் பஜ்வா (Qamar Javed Bajwa) பாகிஸ்தானின் பெரிய தொழிலதிபர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு சம்பவங்களை கொண்டு பார்க்கும் போது பாகிஸ்தானில் ஏதோ மாற்றம் நடக்க உள்ளது என அஞ்சப்படுகிறது.
இதற்கு முன்னர் பாகிஸ்தானில் மூன்று முறை ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுக்குறித்து பார்ப்போம்...!!
முதல் முறை: 1958 இல் பாகிஸ்தானில் முதல் முறையாக ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானின் முதல் ஜனாதிபதி மேஜர் ஜெனரல் இஸ்கந்தர் மிர்சா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தையும் பிரதமர் ஃபெரோஸ் கான் நூனின் அரசாங்கத்தையும் கலைத்தார். அதன்பின்னர் பாகிஸ்தானின் இராணுவத் தளபதி தலைமை ஜெனரல் அயூப்கானிடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைத்தார். ஆட்சி ஒப்படைத்து 13 நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் ஜனாதிபதி இஸ்கந்தர் மிர்சாவை பதவியில் இருந்து அஜூப் கான் நீக்கிவிட்டார்.
இரண்டாவது முறை: 1971 ஆம் ஆண்டில் ஏற்பட்ட போரில் இந்தியாவிடம் தோல்வியுற்றது மற்றும் கிழக்கு பாக்கிஸ்தான் பகுதியை வங்காளதேசம் என்ற புதிய நாடு உருவாக்கியதன் காரணமாக, பாகிஸ்தானில் பெரும் அதிருப்தி உணர்வு ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திக்கொண்ட அப்போதைய பாகிஸ்தான் இராணுவத் தலைமை ஜெனரல் ஜியா-உல்-ஹக், அப்போதைய பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவின் ஆட்சியை ஜூன் 4, 1977 அன்று கவிழ்த்தார். இதன் பின்னர், பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவுக்கு தூக்கு தண்டனையை வழங்கினர்.
மூன்றாவது முறை: 1999 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் நடந்த கார்கில் போரில் தோல்வியடைந்த பின்னர், அப்போதைய ராணுவ தலைமை ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப், நவாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஜெனரல் முஷாரப்பின் உத்தரவின் பேரில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தப்பட்டபோது பிரதமர் நவாஸ் ஷெரீப் இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்தார். இதன் பின்னர், நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது அமைச்சர்கள் அக்டோபர் 12, 1999 அன்று கைது செய்யப்பட்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக