இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இன்றைய
காலக்கட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை எல்லா இடங்களிலும் தடைசெய்து வருகின்றனர்.
அந்த வகையில் பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக தற்போது பேப்பர் தட்டுகள் பிரபலமாகி
வருகிறது. இந்த சமயங்களில் நீங்கள் இத்தொழிலை தொடங்குவதன் மூலம் நிச்சயம் வெற்றி
பெற முடியும்.
தேவையான பொருட்கள் :
பாலிகோட்
ஒயிட் பேப்பர்
டை
மெஷின்
பேப்பர்
பிளேட் மெஷின்
தயாரிக்கும் முறை :
பேப்பர் தட்டுகள் தயாரிப்பதற்கு பேப்பர் பிளேட்
மெஷின் இன்றியமையாதது ஆகும். எனவே பேப்பர் பிளேட் மெஷினை அமைக்க 10 அடி நீளம்
மற்றும் அகலத்தில் ஒரு அறை தேவைப்படும்.
முதலில் பாலிகோட் ஒயிட் பேப்பரை, தயார்
செய்யப்படும் பிளேட்டின் அளவிற்கு ஏற்ப கட்டிங் செய்யப்பட வேண்டும். அதற்கு
பாலிகோட் ஒயிட் பேப்பரை கட்டிங் செய்யும் வளையத்திற்கு கீழ் மொத்தமாக வைத்து
மெஷினை இயக்கினால் பேப்பரானது நமக்கு தேவையான வட்ட வடிவில் கட்டிங் செய்யப்படும்.
பின்பு
கட்டிங் செய்யப்பட்ட பேப்பரை டை மெஷினில் உள்ள அச்சின் மீது வைத்து மெஷினை
இயக்கினால் பேப்பரின் ஓரங்கள் வளைந்து பிளேட்டாக மாறிவிடும். (குறிப்பு : பேப்பரை
பிளேட்டாக வளைக்க டை மெஷின் 5 டிகிரி வெப்பத்தில் இருக்க வேண்டும்.)
இறுதியாக,
தயாரிக்கப்பட்ட பேப்பர் தட்டுகளை 30 அல்லது 40 பிளேட்டுகளாக அடுக்கி பிளாஸ்டிக்
பேப்பரில் சுற்றி செலோ டேப் ஒட்டி பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.
விற்பனை :
தயாரித்த
பேப்பர் தட்டுகளை மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ கடைகளில் விற்பனை செய்வதன் மூலம்
அதிகப்படியான லாபம் பெற முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக