இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உடலின்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சிகள், ஊட்டச்சத்துக்கள், சுவாச
பயிற்சி, தியானம் ஆகியவை முக்கியமாகும். உடலியக்க பயிற்சிகளுடன் ஊட்டச்சத்து மிக்க
உணவுகளையும் அவசியம் அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். அவையே நோய் எதிர்ப்பு
சக்தியை வலுப்படுத்த உறுதுணையாக இருக்கின்றன. அத்தகைய உணவு வகைகள் குறித்து
பார்ப்போம்.
பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து அதிகம்
உள்ளது. இதை தேனுடன் கலந்து சாப்பிட்டு வரலாம். தொடர்ந்து சாப்பிட்டு வருவதால்
உடலுக்கு சக்தியை தரும். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க இது உதவுகிறது.
சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும், நோய்
எதிர்ப்பு தன்மையையும் அதிகரிக்க உதவுகின்றன. அவற்றுள் ஆரஞ்சு, எலுமிச்சை,
திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகம் நிரம்பி உள்ளது.
மேலும் அவை இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை
அதிகரிப்பதோடு, நோய் தொற்றுவில் இருந்தும் உடலைப் பாதுகாக்கும். அத்துடன்
காய்ச்சல் போன்ற உடல்நல பாதிப்பில் இருந்தும் காக்க உதவுகிறது.
மஞ்சள், சோம்பு, பூண்டு போன்றவை உடலுக்கு தீங்கு
விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. இதை அன்றாட
உணவில் பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
எலுமிச்சைப் பழம் நோய் எதிர்ப்புச் சக்தியை
அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின்
செயல்பாடுகளை ஊக்குவித்து உடல் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
எலுமிச்சைப் பழத்தை சாறு பிழிந்து தண்ணீர், சூப்கள், சாலட்டுகளில் கலந்து
சாப்பிடலாம்.
தயிர்
மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களில் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்
இருக்கின்றன. மேலும் இவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும்
உதவுகின்றது.
பீன்ஸ், சிப்பி வகை மீன்கள் போன்றவற்றில்
துத்தநாக சத்துக்கள் அதிகம் உள்ளது. பொதுவாகவே உடலில் துத்தநாகப் பற்றாக்குறை
ஏற்பட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து உடல் பலவீனமாகிவிடுகிறது. அதனால்
துத்தநாக சத்துக்கள் கொண்ட உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.
கீரையில் தாதுக்கள், வைட்டமின்கள், இரும்பு
சத்துக்கள் அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதோடு பலவகையான
நோய்கள் வராமல் காத்துக்கொள்ள உதவுகிறது.
கேரட்,
தக்காளி, நெல்லிக்காய், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றில் வைட்டமின் ஏ, வைட்டமின்
சி, வைட்டமின் இ போன்றவை அதிகம் நிறைந்திருக்கின்றது. இது உடலின் நோய் எதிர்ப்புச்
சக்தியை அதிகரிப்பதோடு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய் தொற்றுவில் இருந்தும்
காக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக