Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 30 அக்டோபர், 2019

கிருத்திகை நட்சத்திரம் !!

 Image result for கிருத்திகை நட்சத்திரம் !!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கிருத்திகை :

நட்சத்திரத்தின் இராசி : மேஷம், ரிஷபம்.

நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன்.

நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கான இராசி அதிபதி : செவ்வாய்.

நட்சத்திரத்தின் இரண்டு முதல் நான்கு பாதத்திற்கான இராசி அதிபதி : சுக்கிரன்.

பொதுவான குணங்கள் :

நேர்மையுடைவர்கள்.

தெய்வபக்தி கொண்டவர்கள்.

ரொம்ப சுத்தமாக திகழக்கூடியவர்கள்.

சாமர்த்தியசாலியாக திகழக்கூடியவர்.

விருந்தோம்பல் பண்பு இவர்களிடம் இருக்கும்.

தர்ம சிந்தனையும், இரக்க குணமும் கொண்டவர்கள்.

அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் இருக்கக்கூடியவர்கள்.

கொஞ்சம் முன் கோபம் மற்றும் பிடிவாத குணம் கொண்டவர்கள்.

கிருத்திகை முதல் பாதம் :

இவர்களிடம் கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

 பூமி, வீடு மற்றும் கால்நடை போன்ற செல்வத்தை உடையவர்கள்.

 நல்ல ஞானம் உள்ளவர்கள்.

 திறமைகளுடன் இருப்பார்கள்.

 எதிரிகளை தந்திரத்தால் வெற்றி கொள்ளக் கூடியவர்கள்.

 உடல் பலவீனம் உடையவர்கள்.

 புகழை விரும்புபவர்கள்.

கிருத்திகை இரண்டாம் பாதம் :

இவர்களிடம் கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

 அதிக பாசத்துடன் இருப்பார்கள்.

 போராட்ட குணம் உடையவர்கள்.

 வீரம் மிக்கவர்கள், தற்பெருமை கொள்பவர்கள்.

 கலைகளை பயிலுபவர்கள்.

 சோம்பேறித்தனமும், மந்தத்தன்மையும் உடையவர்கள்.

கிருத்திகை மூன்றாம் பாதம் :

இவர்களிடம் கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

 நல்ல உழைப்பாளியாகவும்.

 கல்வியில் அதிக பற்றுதல் இருக்காது.

 கயவர்களின் சகவாசம் உடையவர்கள்.

 விடாமுயற்சி, கோபம், பொறாமை, பழிவாங்கும் இயல்பு போன்றவை இருக்கும்.

கிருத்திகை நான்காம் பாதம் :

இவர்களிடம் கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

 மன உறுதி கொண்டவராகவும் இருப்பார்கள்.

 நீதி நேர்மை கொண்டவராகவும் இருப்பார்கள்.

 பெண் போகத்தில் விருப்பம் உடையவர்.

ஆடம்பர வாழ்க்கை வேண்டும் என்ற ஆசை உடையவராகவும் இருப்பார்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!