Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 30 அக்டோபர், 2019

தேங்காய் நீளவாக்கில் உடைந்தால் துரதிர்ஷ்டம் உண்டாகுமா?

 Image result for தேங்காய் நீளவாக்கில் உடைந்தால் துரதிர்ஷ்டம் உண்டாகுமா?


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கோவில்களில் உடைக்கப்படும் தேங்காய் நீளவாக்கில் உடைந்தால் நல்லதா? கெட்டதா?
பொதுவாக தேங்காய் உடைக்கும்போது தேங்காய் சரியாக உடையாமல் இருக்கலாம் அல்லது அழுகி இருக்கலாம். இதுபோன்ற சில நிகழ்வுகள் நம்முடைய மனதை சஞ்சலப்படுத்தும். எனவே, தேங்காய் எப்படி உடைந்தால் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

ஆலயத்தில் உடைக்கும் தேங்காய்க்கு சகுனம் பார்க்கத் தேவையில்லை.

சகுனம் பார்ப்பதற்காக உடைக்கப்படும் தேங்காய், அது உடையும் முறையைப் பொறுத்து நமக்குப் பலன்களைத் தரும்.

தேங்காய் சரிபாதியாக உடைந்தால் குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி குடும்ப ஒற்றுமை மேம்படும்.

தேங்காயின் மேல்பகுதி அதாவது கண்பாகம் உள்ள பகுதி பெரிதாகவும், அடிப்பகுதி சிறியதாகவும் உடைந்தால் இல்லத்தில் செல்வம் பெருகும்.

கண் பகுதி சிறியதாகவும், கீழ்ப்பகுதி பெரியதாகவும் உடைந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து இல்லத்தில் அமைதி பெருகும்.

தேங்காய் உடைக்கும்போது ஒரு சிறிய பாகம் அதனுள் விழுந்தால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும்.

சகுனத்துக்கு உடைக்கும் தேங்காயின் உட்புறம் பூ இருப்பின் நினைத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும்.

தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உடைந்தால் பிரச்சனைகள் உருவாகும்.

சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது சகுனம் பார்க்க வேண்டியதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!