Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 22 அக்டோபர், 2019

விஜய் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் போராட்டம் - வெடித்தது புதிய பிரச்னை!

 நடிகர் விஜய் தங்களை மரியாதைக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பூ தொழிலாளர்கள் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


நடிகர் விஜய் தங்களை மரியாதைக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பூ தொழிலாளர்கள் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிகில் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் ரசிகர்களுக்கு குட்டிக் கதை ஒன்றை கூறினார். அதில் பூக்கடையில் வேலை பார்ப்பவனை வெடிக்கடையில் வேலைக்கு சேர்த்தால் தண்ணீர் தெளித்து வியாபாரத்தைக் கெடுத்து விடுவான் என்று கூறினார்.
இந்த பேச்சு பூ தொழிலாளர்களையும் மரியாதைக்குறைவாக, அவன், இவன் என்று பேசியது தங்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளதாக ஸ்ரீரங்கம் அண்ணா புஷ்ப தொழிலாளர்கள் சங்க செயலாளர் படையப்பா ரெங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
  மேலும் அவர் பேசும் போது, மாவட்டம் தோறும் சுமார் 1 லட்சம் பூ தொழிலாளர்கள் பூத்தொழில் செய்து வருகின்றனர். பிறப்பு முதல் இறப்பு வரை செய்யும் புனிதமான தொழில் செய்பவர்கள் பூ தொழிலாளர்கள். அவர்களை தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அதற்காக விஜய் மன்னிப்பு கோர வில்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
  சில நாட்களுக்கு முன்னர் பிகிஸ் போஸ்டரில் கறி வெட்டும் கட்டை மீது விஜய் செருப்பு கால் வைத்து போஸ் கொடுத்துள்ளார் என்று கூறி, கறிக்கடை சங்கத்தினர் போஸ்டரை கிழித்து எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!