இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திண்டுக்கல்லில்
இருந்து ஏறத்தாழ 58கி.மீ தொலைவிலும், பழநியில் இருந்து ஏறத்தாழ 97கி.மீ
தொலைவிலும், தேனியில் இருந்து ஏறத்தாழ 38கி.மீ தொலைவிலும், வத்தலக்குண்டுவில்
இருந்து ஏறத்தாழ 20கி.மீ. தொலைவிலும் இரு மலைகளுக்கு இடையில் அமைந்து எழில்
கொட்டிக் கிடக்கும் அணைதான் மஞ்சளாறு அணை.
மஞ்சளாறு திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓடும்
வைகையின் ஒரு துணையாறு ஆகும். இது பழநி மலைகளில் உருவாகி பாய்கிறது.
மூலாறு, வறட்டாறு, தலையாறு ஆகிய பகுதிகளில்
பெய்யும் மழைநீர் மஞ்சளாறு அணைக்கு வந்து சேர்கிறது.
கொடைக்கானல்
செல்லும் சுற்றுலா பயணிகள் டம்டம்பாறை என்ற இடத்தில் மஞ்சளாறு அணையின் எழில்மிகு
தோற்றத்தை கண்டு ரசித்து புகைப்படம் எடுப்பது இன்றளவும் வழக்கமாக உள்ளது.
அணையில்
தேங்கும் நீர் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், 10ற்கும் மேற்பட்ட
கண்மாய்களில் நீர் தேக்கப்பட்டு பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
இந்த அணைக்கட்டில் மீன் வளர்ப்பு தொழிலும் நடைபெறுகிறது.
மேலும், இயற்கையாக எந்த வித ரசாயன கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் கலக்காமல்
அருவியில் இருந்து நேரடியாக வருகிறது.
எனவே இங்கு வளர்க்கப்படும் மீன்களை சுற்றுலா
பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். அணையை சுற்றிலும் மலைகளால்
சூழப்பட்டுள்ளது.
மாலைவேளையில் சூரியன் மறையும் காட்சி
தண்ணீரிலிருந்து மலையினுள் செல்வது போன்ற தோற்றத்தை உருவாக்கும். அணையின்
பின்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
மேலும் மழைக்காலங்களில் மஞ்சளாறு அணைக்கு நீர்
ஆதாரமாக உள்ள தலையாறு (எலிவால் அருவி) நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டுவது மிகவும்
ரம்மியமாக இருக்கும்.
இரண்டு மலை முகடுகளின் இடையில் நீர்தேங்கியுள்ள
அணையின் ரம்மியமான அழகை சுற்றுலாப் பயணிகள் பார்த்து, சில்லென்ற காற்றை
அனுபவித்துச் செல்கின்றனர்.
எப்படி செல்வது?
தேனி
மற்றும் திண்டுக்கலில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
தேனி
மற்றும் கொடைக்கானலில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக