இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பல்லாண்டு
வாழ வேண்டுமா? அப்போ இதை கவனிங்க...!!
ஒரு
மனிதனின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பது வாய்தான். வாயை 'உடலின் நுழைவாயில்"
என்கிறார்கள் மருத்துவர்கள். வாயின் செயல்பாட்டுக்கு பற்களே பிரதானம். பற்களில்
ஏற்படும் சிறு பாதிப்புக்கூட உடலை பாதிக்கும். 'பல்"லாண்டு வாழ பற்களின்
ஆரோக்கியம் அவசியம்.
இரவில்
படுக்கைக்கு போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில்தான்
பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவு பொருட்களை சுற்றி ஒருவித
அமிலத்தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.
சுத்தமான
நீரால், வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட
சிறு சிறு உணவு துகள்களை எளிதில் அகற்றிவிடும்.
பாக்டீரியாக்களின்
வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது. அதனால் நாக்கின் மேலும், கீழும் நன்றாக
சுத்தம் செய்வது அவசியம்.
ஆண்டுக்கு
இருமுறையாவது பல் மருத்துவரிடம் சென்று பற்களை பரிசோதித்து கொள்ளுங்கள்.
அப்போதுதான் பற்களுக்கும், உடலுக்கும் உடனடியான தீர்வு கிடைக்கும்.
எலுமிச்சை
துண்டை உப்பில் போட்டு பற்களை தேய்த்தால் பற்கள் வெண்மையாக இருக்கும்.
பற்களை
வெள்ளையாக்கும் பாரம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று.
அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க
வேண்டும்.
பேக்கிங்
சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.
ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள்
மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.
ஈறுகளில்
வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்கள் தினமும் பற்களை துலக்கும்போது, பிரஷில்
சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்கவும்.
பிரியாணி
இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து பற்களை துலக்க வெள்ளையாகும்.
செய்யக்கூடியவை :
இரவு
சாப்பிட்டதும், ஒரு மணி நேரம் கழித்து பல் துலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.
உணவு
சாப்பிடும் நேரத்தில் மட்டும் இனிப்பு சாப்பிடவேண்டும்.
புகைப்பிடித்தல்,
மது அருந்துதல் கூடாது.
போதுமான
அளவுக்கு தண்ணீர் அருந்துங்கள்.
ஒரு
நாளைக்கு ஒரு முறையாவது உணவில் பால் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஜூஸ்
குடிப்பதற்கு பதிலாக பழங்களை கடித்து சாப்பிடலாம்.
செய்யக்கூடாதவை :
கோபமாக
இருக்கும்போது பல்லை கடிக்கக்கூடாது.
பாட்டில்
மூடி போன்ற கடினமான பொருட்களை பல்லால் கடித்து திறக்க முயற்சிக்கக்கூடாது. இதனால்
பற்களுக்கு சேதம் ஏற்படுவதுடன் உதடுகளிலும் கீறல் அல்லது காயம் ஏற்படலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக