இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பதற்றத்தை தவிர்ப்பது எப்படி?
சிலர் எப்போதாவது பதற்றமடைகின்றனர், சிலர்
எடுத்ததற்கெல்லாம் பதற்றமடைகின்றனர். பயம், பதற்றம் ஆகியவை நம்மை கீழே இழுக்கும்
சக்திகளாகவே எப்போதும் உள்ளன.
கஷ்டமான சூழ்நிலையிலிருந்து விலகிய பின்னும்
பதற்றம் தொடர்ந்து நீடித்தாலோ, திடீரென காரணமில்லாமல் ஏற்பட்டாலோ அல்லது அதன்
வீரியம் அதிகரித்தாலோ, அது அன்றாட வாழ்க்கை முறையில் பெருமளவில் பாதித்து உடல்,
மனநலக்கேடுகளை விளைவிக்கிறது.
பதற்றமும் அறிகுறிகளும் :
பதற்றம் பல உடல் உபாதைகளுடன் தொடர்பு உடையது.
பதற்றம் அதிகரிக்க அதிகரிக்க, உடலளவில் நெஞ்சு படபடப்பு, மூச்சு வாங்குதல்,
மயக்கம், அஜீரணம், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, அடிக்கடி சிறுநீர்
கழித்தல், உடலில் வலி, சோர்வு, நடுக்கம், வியர்த்தல், வாய் உலர்தல், தூக்கமின்மை
போன்றவை ஏற்படும்.
எப்பொழுதும்
கவலையுடன் இருத்தல், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் சரியாக கவனம் செலுத்துவதில்
சிரமம், எளிதில் எரிச்சலடைவது, மனச்சோர்வு போன்ற மன உபாதைகளும் ஏற்படும்.
பதற்றம் ஏற்பட காரணங்கள் :
பதற்றம் ஏற்பட மரபுவழி காரணங்கள்
முக்கியமானவையாக கூறப்படுகின்றன. குடும்பத்தினர் யாருக்காவது பதற்றம் இருந்தால்,
மற்றவருக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம்.
மூளையில் உள்ள சில புரதங்கள் குறைவினாலும்
பதற்றம் ஏற்படலாம்.
வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகள்,
உதாரணமாக, விபத்து, இறப்பு போன்றவை மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி பதற்றத்தை
அதிகப்படுத்தும். மனஅழுத்தமும் பதற்றத்தை அதிகரிக்கும்.
பதற்றத்தை தவிர்க்கும் வழிமுறைகள் :
எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும், அமைதியாகவும்,
பதறாமலும் உணர்ச்சிகளை முன்னிலைப்படுத்தாமல் பக்குவமாக தங்களின் மூளையை
பயன்படுத்தி சிந்திக்க வேண்டும்.
இதன் மூலமாக பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுவதோடு,
மனஅழுத்ததையும் தவிர்க்கலாம்.
நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு செல்வது,
உறவுகளுக்கு இடையே நல்ல தொடர்பை ஏற்படுத்தி கொள்வது, முடிந்தவரை தனிமையை
தவிர்ப்பது என்று பழக்கிக்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறும் வகையில் 8
மணி நேர உறக்கம், வெறுப்பற்ற குணம் என்று மனதை அமைதியாக வைத்து கொள்வதாலேயே
பதற்றத்தை தவிர்க்க முடியும்.
யோகா, மூச்சு பயிற்சிகள், தியானம் அனைத்துமே
பதற்றத்தை பெருமளவில் குறைக்கும்.
யோகா
செய்வதன் மூலம் உடலிலும், மனதிலும் ஏற்படும் நிகழ்வுகளில் அதிக கவனத்துடன் இருக்க
முடியும். மேலும் பதற்றத்தின் அறிகுறிகளை கண்டறிந்து சரிவர கையாள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக