இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கருமாரி அம்மன் கோவில்,
தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கி.மீ., தொலைவில்
திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள்
நிறைந்த வனம் என்பது பொருளாகும்.
மூலவர்: தேவி கருமாரியம்மன்
தல விருட்சம்: கருவேல மரம்
தீர்த்தம்: வேலாயுத தீர்த்தம்
பழமை: 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: வேலங்காடு
ஊர்: திருவேற்காடு
தல வரலாறு :
முற்காலத்தில் இப்பகுதியில் நாகப்புற்று ஒன்று
இருந்தது. இதனை மக்கள் அம்பிகையாக பாவித்து வணங்கி வந்தனர். ஒருசமயம் பக்தர்
ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை, புற்று இருந்த இடத்தில் தனக்கு கோவில்
கட்டும்படி கூறினாள். அதன்படி இங்கு கோவில் எழுப்ப, புற்றை பெயர்த்தனர்.
அப்போது புற்றின் அடியில் அம்பிகை, சுயம்பு
வடிவில் எழுந்தருளியிருந்தாள். பின்பு இங்கு கோவில் கட்டப்பட்டது. அம்பிகை தானாக
தோன்றியதால் இவளுக்கு, 'கருவில் இல்லாத கருமாரி" என்ற பெயரும் உண்டு.
தல சிறப்பு :
கருமாரியம்மன், மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவில்
காட்சி தருகிறாள்.
இந்த தலத்தின் அம்மனுக்கான விசேஷ நாளாக
ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள்
இக்கோயிலுக்கு வருகை தந்து தங்கியும் செல்கின்றனர். இங்கு மிகப்பெரிய நாகப்புற்று
உள்ளது.
பிராத்தனை :
அன்னையின் அருளால் இங்கு வரும் பக்தர்களுக்குத்
திருமண வரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி ஆகியவற்றைத் தருகிறது.
தீராத நோய்களைத் தீர்த்தருளும் வேப்பிலையை
மக்கள் அன்னையிடமிருந்து பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர்.
வேப்பிலையும், பிரம்பும் கொண்டு மந்திரிக்கப்பட்டு
பில்லி, சூன்யம், மனநோய் போன்றவை நீங்கப்பெறுகின்றனர். ராகு கேது கிரக தோஷம்
உள்ளவர்கள் புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோஷங்கள் விலகுகின்றன.
புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு
அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின்
அருள் வாக்கு.
பிராத்தனை நிறைவேறியவர்கள்
அம்பிகைக்கு பாலபிஷேகம் செய்தும், அக்னி சட்டி எடுத்தும், அங்க பிரதட்சணம்
செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக