இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒரு
காட்டுல யானைக் குட்டி இருந்தது. அந்த காட்ல அதுதான் பெரிய ஆளுன்னு அதுக்கு ரொம்ப
திமிரு. தினமும் காட்டுல தும்பிக்கைக்கு எட்டுகிற மரக்கிளைகளை ஒடிச்சு
சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சு. ஒரு நாள் வழக்கம்போல ஒரு மரக்கிளையை ஒடிக்கபோனப்ப
அங்கிருந்த ஒரு சிட்டுக்குருவி யானையை பார்த்து வணக்கம் நண்பா என்றது. அதைக்கேட்ட
யானைக்குட்டி உன்னோட உருவம் எவ்வளவு? என்னோட உருவம் எவ்வளவு? நான் உனக்கு நண்பனா?
என்று அலட்சியமாக கேட்டது. உடனே குருவி நட்புக்கு மனசு தான் முக்கியம், உருவம்
முக்கியம் இல்லைனு சொல்லுச்சு.
நான்
இந்த மரத்தில் ரொம்ப நாளா இருக்கேன். நீ இதை ஒடிச்சுட்டீனா, நானும் இங்கே இருக்கிற
மற்ற பறவைகளும் எங்கே செல்வது? என்று கேட்டது. அதுக்கு யானை இந்த மரம் உங்களுக்கு
வேணுனா வீடா இருக்கலாம். ஆனா எனக்கு இதுதான் சாப்பாடு என்று கேலியாக சொன்னது. உடனே
குருவி அப்படின்னா நமக்குள்ளே ஒரு போட்டி வச்சுகலாம். அதில் நீங்கள் ஜெயிச்சா,
இந்த மரக் கிளைகளை உடைத்து சாப்பிடு. நான் ஜெயிச்சா மரத்தை ஒடிக்கக்கூடாது என்றது.
சரி என்னனு சொல்லு என்றது யானைக் குட்டி. நாம ரெண்டு பேரும் அந்த மலை வரைக்கும்
பறக்கணும். யார் முதலில் அங்கே போகிறோமோ, அவங்கதான் ஜெயிச்ச மாதிரி என்றது
சிட்டுக்குருவி. யானையால பறக்க முடியாதுனு தெரிஞ்சும் வீண் வீம்புக்காக இவ்வளவு தானா
என்று போட்டிக்கு ஒப்புக் கொண்டது.
எப்படியாவது
பறந்தாக வேண்டும், என்று நினைத்த யானை வழியிலே ஒரு கோழியை பார்த்தது. கோழி கோழி,
எனக்கு ஒரு உதவி செய், எனக்கு பறக்க கற்றுக்கொடு என்றது. அதைக்கேட்ட கோழி அது
ரொம்ப சுலபம் அண்ணா. நான் என்ன செய்றேன்னு பாரு. அதே மாதிரி நீ செய். அப்பறம் பாரு
நீயும் பறந்துருவ என்றது. யானையும் சரி என்றது. கோழி ஒரு பாறை மேலே ஏறி
நின்னுகிட்டு இறக்கையை சடசடனு அடிச்சுகிட்டு தாவி சில நொடிகள் மேலே பறந்தவாறு கீழே
வந்து நின்றது. இவ்வளவு தான், அண்ணே சுலபம் தான். எங்கே நீ பற பாக்கலாம் என்றது. யானையும்
கஷ்டப்பட்டு பாறை மீது ஏறி நின்று கோழி மாதிரி காலை விரிச்சிகிட்டு தாவியது.
அவ்வளவு தான், தொப்பென்று கீழே விழுந்தது.
அய்யோ,
அம்மானு கத்திக்கிட்டே டேய் உன்ன பறக்குறதுக்கு வழி கேட்டா என்ன இப்படி விழ
வச்சுடயே என்றது. யானை தன்னை அடித்துவிடுமோ என்று பயந்து கோழி ஓடியே போய்விட்டது.
யானை அவசரப்பட்டு போட்டிக்கு ஒப்புக்கிட்டோமோ? என நினைத்தது. ஆனால்
சிட்டுக்குருவியிடம் எப்படியாது ஜெயிச்சுடணும்னு நினைச்சுது. அந்தபக்கம் ஒரு காகம்
பறந்து வந்ததைப் பார்த்த யானை, விஷயத்தைச் சொல்லிச்சு. உனக்கு உன்னோட வெயிட்தான்
பிரச்சனையே. நாலு நாள் சாப்பிடமா இருந்தா பறந்திடலாம் என்று சொல்லிட்டு
போய்ருச்சு.
யானையும்
நாலு நாளா சாப்பிடாம பட்டினியில சோர்ந்து போச்சு, ஆனா எப்படியாவது பறந்து
பாக்கலாம்னு மெதுவா எழுந்துச்சு. ஆனால் பாவம் எழுந்திருக்கவே முடியல. அதை பார்த்து
அங்கு வந்த கழுகு, பறக்கிறது சாதாரண விஷயம் தான், அதுக்கு நீ, அதோ தெரியுதே உயரமான
மலை, அந்த உச்சிக்குப் போய் அங்கிருந்து கண்ணை மூடிக்கிட்டு குதி, தானா பறந்துடுவே
என்று கழுகு சொன்னது.
யானை
அப்படி குதித்தால் பறக்கமுடியுமா என்ற தயக்கத்துடன், மூச்சுவாங்க மலை மேல ஏறி
உச்சிக்கு போனது. அங்கேயிருந்து கீழே பார்த்தா அவ்வளவு பெரிய காடு, மரம் எல்லாம்
சின்னதாக தெரிஞ்சுதாம், யானைக்கு கீழே குதிக்க ரொம்ப பயம். கண்ணை மூடிகிட்டு கீழே
குதிக்கும்போது குருவி வந்ததாம். யானை அண்ணா, இங்கே இருந்து குதிச்சா நீங்க காலி.
உங்களாலே
பறக்க முடியாது, என்னால சின்ன கல்லைக் கூட தூக்க முடியாது, அவங்க அவங்க பலமும்,
திறமையும் அவங்களுக்கு தான். இனிமே நாம நண்பர்களாக இருக்கலாம். இந்த போட்டியே
வேண்டாம் என்றதும் யானை யோசித்துப் பார்த்தது. குருவி சொல்றது சரி தான். நான் தான்
பெரிய ஆளுனு திமிரா நடந்துகிட்டேன், நாம இனிமே நண்பர்கள் ஆகிறலாம்னு சொல்லிச்சு.
அன்றிலிருந்து யானையும், சிட்டுக்குருவியும் நண்பர்களாக இருந்தார்கள்.
நீதி:
யாரையும் அலட்சியமாக நினைப்பது மிகவும் தவறு. எல்லோரிடமும் அன்பாகவும், நட்பாகவும்
நடப்பதே சிறப்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக