Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 30 அக்டோபர், 2019

அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோவில், அயோத்தியாப்பட்டணம்

 Image result for அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில், அயோத்தியாப்பட்டணம்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சிற்ப கலைக்கு மட்டுமல்லாமல் ஓவியக் கலைக்கும் பெயர் பெற்று பல ஆண்டுகளாகியும் காலத்தால் அழியாத அற்புத ஓவியங்களை கொண்ட புராதன சிறப்புமிக்க கோவில் சேலம் அயோத்தியாபட்டணம் இராமர் கோவில். இராமர் காலடி பட்டதால் அயோத்தியாபட்டணம் என்ற பெயரை இவ்விடம் பெற்றது. இராவண வதம் முடிந்து இராமர் பட்டாபிஷேகம் செய்த கோவில்.

 மூலவர் - இராமர்

 தாயார் - சீதை

பழமை - 500வருடங்களுக்கு முன்

தல வரலாறு :

சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று இராவணனை கொன்ற இராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அயோத்திக்கு திரும்ப வேண்டும் என்றால் சைலமலைக் குன்றுகள் வழியாகத்தான் திரும்ப வேண்டும். இராமர், சீதை, இலட்சுமணன், அனுமார், சுக்ரீவர், விபீஷணர் அனைவரும் சைலமலைக் குன்றுப் பகுதியை வந்தடைந்த போது லேசாக இருட்டத் தொடங்கியது. களைப்பாறி விட்டு செல்லலாம் என்று நினைத்த போது, சிறிய அளவிலான கோவில் ஒன்று தென்பட்டது. இங்கு இராமர், சீதை, இலட்சுமணன் உட்பட அனைவரும் அன்றிரவு தங்கினர்.

விடிந்து எழுந்த போது பட்டாபிஷேகத்திற்கான நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டது. நேரம் தவறினால் ராஜகுற்றமாகிவிடும் என்று எண்ணிய இராமர் இந்தக் கோவிலிலேயே பட்டாபிஷேகம் செய்து கொண்டதாகவும், பின்பு அயோத்தி சென்று முறைப்படி பட்டாபிஷேகம் முடித்தார் என்றும் சொல்வதுண்டு.

தல பெருமை :

கலைநுட்ப வேலைப்பாடுகள் மிக்க தூண்களை தட்டினால் பல்வேறு இசை ஒலிகள் எழுந்து மனதை மயக்குகின்றன. இந்த கோவில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. அசுரனை வதை செய்யும் தேவர், குதிரை, யானை, யாழி, சிங்கம் போன்றவற்றின் மீது அமைந்திருப்பது போன்ற ஒரே கல்லில் செய்யப்பட்ட பல்வேறு கற்சிற்பங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன.

சிற்பங்களில் குறிப்பாக இராமர் பட்டாபிஷேகக் காட்சி, பரதன், சத்ருக்னன், இலட்சுமணன் கற்சிற்பங்களைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு தூணில் திருமலை நாயக்கர் தன் தேவியுடன் காட்சி தருகிறார்.

சிறப்பம்சம் :

இங்கு இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் கோவில் கதவு ஓட்டை வழியாக வரும் சூரிய ஒளி பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் தற்போது கோவிலை சுற்றி எழுப்பப்பட்டு விட்ட கட்டடங்களால் தடுக்கப்பட்டு விட்டது. மூலஸ்தானத்திற்கு பாதுகாவலர்களாக துவார பாலகர்கள் வீற்றிருக்கின்றனர்.

கோரிக்கைகள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விலங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். இதனால் சகல புண்ணியங்களும் கிட்டும்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக