இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ராசியும்.... பொதுவான குணமும்..!
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசி,
லக்னத்தில் பிறந்திருப்பார்கள். அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும், ஒவ்வொருவிதமான
பழக்கம், யோகம் போன்றவை அவரவர் ராசியை பொறுத்து அமையும்.
அந்த வகையில், இன்று 3-வது ராசியான
மிதுன ராசிக்குரிய பொதுவான குணநலன்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
மிதுன ராசி :
மிதுன ராசியின் அதிபதி புதன் பகவானாவார்.
மிதுன ராசியில் மிருகசீரிஷம் 3, 4ம்
பாதங்களும், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தின் 1,2,3ம் பாதங்கள் ஆகியவை
அடங்கும்.
மிதுன ராசியின் வேறு பெயர்கள் :
வாழ்வு, இரட்டை, பாட்வன், பாடவை,
வீணை, யாழ் மற்றும் புதுமகளிர் என்பது மிதுன ராசியின் வேறு பெயர்கள் ஆகும்.
பொதுவான குணங்கள் :
மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்காமல் தமது
காரியத்தை செய்யக்கூடியவர்கள்.
பேச்சாற்றல் உடையவர்கள்.
எந்தவொரு பிரச்சனையிலும் நன்கு சிந்தித்து
செயல்படக்கூடியவர்கள்.
சுகபோகமாக வாழ்வதில் ஈடுபாடு உடையவர்கள்.
புதிய செயல்பாடுகளில் ஆர்வத்துடன்
செயல்படக்கூடியவர்கள்.
மற்றவர்களை எளிதில் நம்பாதவர்கள்.
சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.
எளிதில் அனைவரிடத்திலும் நட்பு வைத்து
கொள்ளக்கூடியவர்கள்.
தனது மனம் கவர்ந்தவர்களுக்கு இன்னல் ஏற்படாத
வண்ணம் காக்கக்கூடியவர்கள்.
குழப்பவாதியாக இருப்பினும் எடுத்த பணியை தகுந்த
நேரத்தில் செய்து முடிக்கக்கூடியவர்கள்.
ஒரே நேரத்தில் இருவேறு பணிகளை மேற்கொள்ளும்
திறமை உடையவர்கள்.
புறத்தோற்றத்தை கொண்டு இவர்களின் திறமையை அறிய
இயலாது.
எதையும் உடனே புரிந்துக்கொள்ளும் ஆற்றல்
கொண்டவர்கள்.
எந்தவொரு காரியத்திலும் பொறுப்புடன்
செயல்படக்கூடியவர்கள்.
இவர்களுடன் நெருங்கி பழகினால் மட்டுமே இவர்களை
பற்றி புரிந்துக்கொள்ள முடியும்.
புது புது மாற்றத்தை உருவாக்கக்கூடியவர்கள்.
தன் விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.
தங்களின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள்.
சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தங்கள் குணத்தை
மாற்றி கொள்வார்கள்.
கடின உழைப்பை காட்டிலும்
புத்திசாலியான செயல்பாடுகளை செய்ய விரும்பக்கூடியவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக