இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தேவாரப் பாடல்களில் வயல்களால்
சூழப் பெற்ற வளநகர் என குறிக்கப்பட்ட இத்தலம் திருச்சேறை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.
மனிதனுக்கு செம்மை தரும் நெறியை - முக்தி நெறியை அளித்தருளும் இறைவன் வெளிப்படும்
தலமிது என்ற பொருளில் இத்தல பெருமானுக்கு செந்நெறியப்பர் என்ற பெயர்
வழங்கப்படுகிறது.
மூலவர் - சாரபரமேஸ்வரர்,
செந்நெறியப்பர்
அம்மன் - ஞானாம்பிகை, ஞானவல்லி
தல விருட்சம் - மாவிலங்கை
தீர்த்தம் - மார்க்கண்டேய தீர்த்தம்,
பிந்து சுதா தீர்த்தம், ஞான தீர்த்தம்
பழமை - 1000வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் - உடையார் கோவில்
தல சிறப்புகள் :
இத்தலத்தில் மட்டுமே மூன்று
துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என
மூன்று வடிவங்களாக ஒரே சன்னதியில் காட்சியளிப்பது சிறப்பாகும். இத்துர்க்கையை
வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் வழிபாடு செய்வது சாலச்சிறந்ததாகும்.
நவக்கிரகத்தை தரிசித்து,
நடராஜபெருமான் சன்னதிக்கருகில் சென்றால் பைரவர் அருள்காட்சியளிக்கிறார். மேலும்
இடதுமேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ள பைரவர் வேறு எங்கும் இல்லாதது தனி
சிறப்பாகும்.
மேலும் இங்கு தலவிருட்சமான மாவிலங்கை
வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை
வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி
காணப்படும்.
சிறப்பு வழிபாடு :
ஆண்டுதோறும் மாசி மாதம் 13, 14,
15தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும்,
அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுகின்றது. இந்த மூன்று நாட்களிலும் மாலை
வேளைகளில் கண்டியூரில் சூரிய பூஜை நிகழ்வதும் குறிப்பிடத்தக்கது. மாசி மாதம்
முழுவதும் காலையில் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இவரை, 11 வாரம் திங்கட்கிழமைகளில்
தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11வது வாரம் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் பிரார்த்தனை
நிறைவேறும். வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும்
இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆகும்.
கோவில் அமைப்பு :
வெளிப்பிரகாரத்தில் மூலவர்
சாரபரமேஸ்வரருக்கு இடப்பால் இறைவி அம்பிகையாக ஞானவல்லி அம்மன் சன்னதி
அமைந்துள்ளது. இறைவன் நெறிப்படுத்திய வாழ்க்கையின் ஞானத்தை அருள்பவர் ஞானவல்லி
அம்பாள். உள்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், இடபாரூடர், தட்சிணாமூர்த்தி,
காலபைரவர், துர்க்கை, சூரியன், சனிபகவான் முதலிய சன்னதிகள் உள்ளன.
மேற்கு பிரகாரத்தில் தல விநாயகரும்,
அவரையடுத்து மார்க்கண்டேயரும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால்
வழிபாடு செய்யப்பட்டதுமான, மக்களின் வறுமையை போக்கி செல்வத்தை கொடுக்கவல்ல ஸ்ரீ
ரிண விமோசன இலிங்கேஸ்வரரின் சன்னதி உள்ளது. இவருக்கு அடுத்து பாலசுப்பிரமணியர்
சன்னதியும் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன்
எனும் சோழ மகாராஜாவால் கட்டப்பட்ட திருக்கோவிலாகும்.
பிராத்தனைகள் :
வழக்கு விவகாரங்களில் வெற்றி பெற,
நவக்கிரக தோஷங்கள் நீங்க, கடன், பிணி தீர, வறுமை விலகி செல்வ வளம் பெருக,
மக்கட்பேறு, கல்வி, பொருள் என அனைத்தும் கிடைக்க இத்தல இறைவனிடம் பிரார்த்தனை
செய்துகொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள்
இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு
பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பொருள் வசதி படைத்தோர் அன்னதானம்
செய்தும், கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக