Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 29 அக்டோபர், 2019

பரணி நட்சத்திரம் !!

 Image result for பரணி நட்சத்திரம் !!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


பரணி :

 நட்சத்திரத்தின் இராசி : மேஷம்.

 நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன்.

 இராசியின் அதிபதி : செவ்வாய்.

பொதுவான குணங்கள் :

 நினைத்ததை சாதிக்கக் கூடிய மனவல்லமையும், கோபமும், பிடிவாத குணமும் கொண்டவர்கள்.

 மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள். சிலருக்கு பெண்களால் பண விரயம் ஆகலாம்.

 ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையும் எதிர்பார்ப்பும் கொண்டவர்கள்.

 இரக்கக் குணமும், தர்ம சிந்தனையும் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.

 கொஞ்சம் பயந்த தன்மையும், கோழைத்தனமும் அவ்வப்போது தோன்றி மறையும்.

பெரும்பாலும் இவர்கள் இரும்பு சம்மந்தமான தொழிலை செய்யக்கூடியவர்கள்.

பரணி முதல் பாதம் :

இவர்களிடம் பரணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

இவர்கள் சட்டென்று கோபம் கொள்ளக்கூடியவர்கள்.

பிரபலமானவர்களின் நட்புகளை கொண்டவர்கள்.

போட்டிகளில் வெற்றி காணக்கூடியவர்கள்.

கல்வியில் பல துறைகள் சம்மந்தமான அறிவை உடையவர்கள்.

மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் நீதித்தன்மையுடன் நடக்கும் உத்தமர்கள்.

பரணி இரண்டாம் பாதம் :

இவர்களிடம் பரணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

திறமைகள் மற்றும் சிறந்த கல்வி உடையவர்கள்.

எளிதில் எதிரியை வெல்லக்கூடிய கெட்டிகாரர்கள்.

புத்திசாலித்தனமான பேச்சுத் திறமையால் பல கீர்த்திகளை பெற்றவர்கள்.

நற்குணங்களை வாய்க்கப் பெற்றவர்கள். உதவும் மனப்பான்மை உடையவர்கள்.

பரணி மூன்றாம் பாதம் :

இவர்களிடம் பரணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

போராட்ட குணம் உடையவர்கள்.

எதிலும் ஜெயம் கொள்ளக்கூடியவர்கள்.

ஆடம்பரமாகவும், சொகுசாகவும் வாழ்வார்கள்.

உருண்டையான பெரிய கண்களை உடையவர்கள்.

திடகாத்திரமான உடல் அமைப்புகளை உடையவர்கள்.

பரணி நான்காம் பாதம் :

இவர்களிடம் பரணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

அகங்காரம் உடையவர்கள்.

பிடிவாத குணம் மிகுந்தவர்கள்.

தீய பழக்கம் உடையவராகவும் இருப்பார்கள்.

ஓரளவு கல்வி ஞானம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக