இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மதுரையில்
இருந்து ஏறத்தாழ 1கி.மீ தொலைவிலும், தேனியில் இருந்து ஏறத்தாழ 78கி.மீ தொலைவிலும்,
விருதுநகரில் இருந்து ஏறத்தாழ 61கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய இடம்தான்
திருமலை நாயக்கர் அரண்மனை.
மதுரையில்
அமைந்துள்ள இக்கட்டிடம், புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து சுமார்
1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரித்து
வரும் அரண்மனைகளில் இந்த அரண்மனையும் ஒன்றாகும்.
திருமலை
நாயக்கர் அரண்மனை அல்லது திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் இந்த அரண்மனை,
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது.
கூரையில்
விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அந்தக்
காலத்தில் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக திருமலை நாயக்கர் மஹால்
அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும், மற்றது ரங்க விலாசம் என்றும்
அழைக்கப்பட்டன.
இந்த
அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை,
வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள்,
தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.
இங்கு
ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டு இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. சுற்றுலா
வளர்ச்சி கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஒலி-ஒளி காட்சி தினந்தோறும் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது.
இங்குள்ள
தூண்களில் பலவகையான சிற்பங்கள் அழகாக செதுக்கி வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும்
மன்னர் அமர்ந்த சிம்மாசனமும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அற்புதமான கட்டிடக்கலை
அம்சங்களை கொண்டுள்ள இந்த அரண்மனையில் ஸ்டுக்கோ பாணி அலங்கார அம்சங்கள் இடம்
பெற்றுள்ளன.
அக்காலத்தில்
பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மற்றும் மரச்சாமான்களையும் இந்த அரண்மனையில்
காணலாம்.
அரண்மனை
முகப்பு, நாட்டிய அரங்கம் மற்றும் பிரதான மண்டபம் போன்றவை இந்த அரண்மனையின்
முக்கிய அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.
எப்படி செல்வது?
மதுரைக்கு
அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
மதுரையில்
பல்வேறு வகையான கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக