Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 அக்டோபர், 2019

டிக்கெட் கூஸ் - கார்த்தி ஈஸ்வரமூர்த்தி


karthi eswara moorthy
கார்த்தி ஈஸ்வரமூர்த்தி

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com







டிவி, செல்போன் வாங்குவது முதல் ரயில், விமான டிக்கெட்டுகளை வாங்குவது வரை இன்று எல்லாமே ஆன்லைனில்தான். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் என்கிற துறையில் ஆரம்பத்திலேயே களம்புகுந்த நிறுவனம்தான் டிக்கெட்கூஸ். இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ கார்த்தி ஈஸ்வர மூர்த்தியைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.
டிக்கெட் கூஸ் உருவான கதையைச் சுருக்கமாகச் சொல்லுங்களேன்!
“நான் அமெரிக்காவில் வேலைசெய்துகொண்டிருந்த சமயம், அவ்வப்போது சென்னை வந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு போகவேண்டியிருக்கும். ரயில் டிக்கெட் என்றால், முன்னரே பதிவு செய்யவேண்டும். அரசுப் பேருந்துகளில் மக்கள் நெருக்கடி அதிகம். எனவே, தனியார் பேருந்துகள்தான் ஒரே வழி. ஆனால், தனியார்ப் பேருந்துகளைப் பொறுத்தவரை, நேரில் சென்று பணம் தந்தால் மட்டுமே சீட்களை புக் செய்யமுடியும். போன்மூலம் சீட்டை பிளாக் செய்தாலும், ‘கடைசி நேரத்தில் வரவில்லை என்றால் எங்களுக்குத்தான் நஷ்டம்’ என புக் செய்யமாட்டார்கள். இந்தச் சிக்கலை நானும் சந்தித்தேன். இதை என்னுடைய நண்பர் அருண் அதியப்பனிடம் கூறினேன். இதற்குத் தீர்வு காணவேண்டும், இதில் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்காக வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையில் இந்த ஆன்லைன் புக்கிங் சேவையை 2007-ல் தொடங்கினோம். முதலில் இதை பஸ் ஆபரேட்டர்களுக்குப் புரிய வைப்பதுதான் எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. ‘கணினியை நீங்கள் வாங்கித் தருவதாக இருந்தால், இந்த வசதியைத் தருகிறோம்’ என்றார்கள். அப்படியும் இரண்டு, மூன்று டிக்கெட்டுகளையே ஆன்லைனிற்குத் தருவார்கள். இப்படிப் பல சோதனைகளைக் கடந்தே இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்.’’


டிஜிட்டலில் முன்பைவிட இன்று போட்டி அதிகரித் திருக்கிறது. எல்லா நிறுவனங்களுக்கும் பிசினஸ் வாய்ப்பு இருக்கிறதா?
“ஆன்லைன் பஸ் புக்கிங்கைப் பொறுத்தமட்டில், ஐந்து நிறுவனங்கள் வரை பெரிய அளவில் செயல்பட வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த பிசினஸ் பெரியது இந்தியாவின் பஸ் புக்கிங் சந்தை. கிட்டத்தட்ட ரூ.40,000 கோடி மதிப்பிலான சந்தை இது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 50,000 பேர் நகரங்களுக்குக் குடியேறுகின்றனர். தமிழகத்தில் 52% பேர் நகரங்களில்தான் வாழ் கின்றனர். படிப்பு, வேலை என ஏதாவது காரணத்திற்காகப் பெருநகரங்களுக்கு மக்கள் சென்றுகொண்டேதான் இருக்கின்றனர். இவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்துசெல்வது இன்றியமை யாதது. இது ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனால் தற்போது இந்தத் துறையில் தொய்வு என்பதே இல்லை.’’
சமீபத்தில் பே டிஎம் போன்ற பெரும் நிறுவனங்களும் தங்களின் சேவைகளில் ஒன்றாக பஸ் புக்கிங்கை தரத் தொடங்கியிருக்கின்றனவே!
“இந்த மாதிரியான பெரும் நிறுவனங்களுக்கும் ஸ்டார்ட்அப்களுக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உண்டு. பெரிய அளவில் வளர்ந்திருக்கும் நிறுவனங்கள் ஏற்கெனவே வெற்றிகண்ட ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துதான் களம் இறங்கும். இந்தச் சேவையையும் கொடுத்தால் வருமானத்தைக் கூட்டலாம் என்று அவர்களின் முயற்சி முழுக்கவும் வணிகம் சார்ந்ததாகவே இருக்கும். இதுவே ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் கவனம் சேவையை எப்படி நல்லபடியாக வழங்கலாம், பிரச்னை களுக்கு எப்படித் தீர்வு காணலாம் என்பதில் இருக்கும்.
பெரும் நிறுவனங்கள் இதில் வரும்போது அழுத்தம் என்பது இருக்கவே செய்யும். 10 ரூபாய்க்கெல்லாம் சில நிறுவனங்கள் டிக்கெட்டு கள் விற்றன. பெரிய அளவில் விளம்பரமும் செய்வார்கள். அப்போதெல்லாம் நாங்கள் சிறிய சறுக்கலைச் சந்திக்கவே செய்தோம். ஆனால், கீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்துவரும் குணம் கொண்டவை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்தான். இந்தப் போராட்ட குணம் இருப்பதால்தான், இன்றும் இந்தச் சந்தையில் எங்களால் நிலைத்து நிற்க முடிகிறது.”

இன்றைய மார்க்கெட்டிங் முறைகள் எந்த அளவில் மாறியிருக்கின்றன?
“பணம் இருப்பவர்களுக்கு மார்க்கெட்டிங் ஈஸி. எல்லா வகையான மார்க்கெட்டிங் முறை களிலும் அவர்கள் மார்க்கெட்டிங் செய்யலாம். ஆனால், குறைந்த பட்ஜெட் இருப்பவர்களுக்கு டிஜிட்டல் சிறந்த வாய்ப்பைத் தருகிறது. குறுகிய நேரத்தில் மக்களின் கவனத்தைப் பெறக்கூடிய வைரல் கன்டென்ட்டை உருவாக்க முடிந்தால் போதும். டிஜிட்டலிலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.”
பண்டிகைக் காலங்களில் டிக்கெட் விலைகளை அதிகம் வைக்கக்கூடாதென அரசு வலியுறுத்துகிறது, ஆனால், ஆன்லைன் புக்கிங் தளங்களில் வெளிப்படையாக விலைகளை ஏற்றி விற்கின்றன. இதில் டிக்கெட்கூஸ் போன்ற டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் குறுக்கிட்டு, சில கட்டுப்பாடுகளை விதிக்கமுடியாதா?
“உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், முடியாதுதான். பஸ் ஆபரேட்டர்கள்மீது எங்களுக்கு எந்த கன்ட்ரோலுமே இருக்காது. நாங்கள் மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே யான தொடர்புபாலம் மட்டுமே. எந்த விலையில் டிக்கெட் விற்கப்பட்டாலும் எங்களுக்கு ஒரே அளவிலான சன்மானம்தான். இந்த நிலையில் நாங்கள் என்ன செய்யமுடியும்? விலை அதிகம் வைத்து அந்த டிக்கெட்டுகளை விற்காமல் போனால்கூட எங்களால் அவர்களிடம் சென்று முறையிட முடியும். ஆனால், என்ன கட்டணம் வைத்தாலும் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிடு கின்றன. அரசு போன்ற ஒரு பெரிய அமைப்பால் தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். நாங்களும் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்றே எண்ணுகிறோம்.’’
ஒரு பரிவர்த்தனையில் எத்தனை சினிமா டிக்கெட்டுகள் விற்கப்பட்டாலும் ஒரு டிக்கெட்டுக்கான ஆன்லைன் பரிவர்த்தனை தொகைதான் வசூலிக்கப்படும் என்று சமீபத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது; இது பஸ் புக்கிங்கிற்கும் வந்தால், எந்த மாதிரியான சிக்கல்களை அது ஏற்படுத்தும்?
“இது சிறிய டிஜிட்டல் ஸ்டார்ட்அப் நிறுவனங் களைப் பெருமளவில் பாதிக்கும். இந்த ஆன்லைன் புக்கிங் பிசினஸ்களைப் பொறுத்தவரை, இதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பு களுக்கான முதலீடு பெரியது. மேலும், 80% தொகை மார்க்கெட்டிங்கில்தான் செலவிடப் படுகின்றன. அதனால் சொத்து எனச் சொல்ல இந்த நிறுவனங்களிடம் எதுவும் இருக்காது. இப்படியான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கொண்டுவருவது டிஜிட்டல் ஸ்டார்ட்அப்களுக்கு அழுத்தம் தரும் செயலே!”
ஸ்டார்ட்அப்களுக்கு ஐடியா பிடிப்பது எப்படி என்று இன்றைய இளைஞர்கள் கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்?
“சாலையில் நடந்துபோகிறீர்கள். உங்கள் பாதையின் நடுவே ஒரு பெரிய பாறை இருக்கிறது. தூரம் அதிகம் என்றாலும் 99.99% பாறையைச் சுற்றித்தான் செல்வார்கள். ஆனால், இந்தப் பாறையைக் குடைந்து ஒரு சுங்கச்சாவடி அமைக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றினால் நீங்கள்தான் பிசினஸ்மேன். அதாவது, உங்கள் முன் இருக்கும் தடங்கலைப் பார்த்து அதற்கு ஒரு தீர்வுகாண முற்படுங்கள். இதைச் செய்ய நீங்கள் பில்கேட்ஸாகவோ, ஸ்டீவ் ஜாப்ஸாகவோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மக்களையும், மக்களுக்கான பிரச்னைகளையும் உன்னிப்பாகக் கவனிப்பவராக இருந்தாலே போதும். இது மாதிரியான பல சிக்கல்களைத் தீர்த்து வைக்க நினைப்பதன் விளைவுதான் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்படுவதற்கான ஐடியா.’’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக