Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 21 அக்டோபர், 2019

காதுக்குள் இருக்கும் அழுக்கை பட்ஸ் இல்லாமலே எப்படி வெளியே எடுக்கலாம்!!


Image result for காதுக்குள் இருக்கும் அழுக்கை பட்ஸ் இல்லாமலே எப்படி வெளியே எடுக்கலாம்!!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com





Q-டிப், காட்டன் பட்ஸ், பாபி பின், ஹேர் பின், உங்கள் விரல் போன்றவற்றை காதுக்குள் நுழைத்து அழுக்கை எடுக்க முயற்சிப்பதால் செவியின் மேல்புறம் உள்ள அழுக்கு மட்டுமே வெளியேற்றப்படுகிறது.

மீதம் உள்ள அழுக்கு இன்னும் ஆழத்திற்கு சென்று காது கால்வாய்க்குள் தள்ளப்படுகிறது. இயர் போன், இயர் ப்ளக் போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துவதும் செவிகளில் அடைப்பு ஏற்படக் காரணமாக இருக்கலாம். காரணம் செவிக் கால்வாயிலிருந்து அழுக்கு இயற்கையாக வெளியேறும் முறையை இவை தடுக்கக் கூடியதாக இருக்கலாம்.

அறிகுறிகள் செவிகளில் அழுக்கு சேமிக்கப்பட்டு இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் குறிப்பிட்ட காலம் கடந்தும் இருந்தால், மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது. .

காது வலி . கேட்கும் திறன் குறைதல் அல்லது பகுதி நேர காது கேளாமை . காதில் ரீங்காரம் ஒலிப்பது . காது அடைப்பது போல் உணர்வு . காதில் சீழ் வடிதல் . மயக்கம் . காதில் இருந்து துர்நாற்றம் உண்டாவது . காதுகளில் அரிப்பு அல்லது எரிச்சல் . கடுமையான சுழல் உணர்வு . சமநிலை இழப்பு . நடக்க இயலாமை . வாந்தி . அதிக காய்ச்சல் . திடீர் காது கேளாமை

எண்ணெய் காதில் உள்ள அழுக்கை வெளியேற்ற அதனை முதலில் மென்மையாக்கிக் கொள்ள வேண்டும். முதலில் சில நாட்கள் தொடர்ந்து பேபி எண்ணெய், மினரல் எண்ணெய், கிளிசரின், ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவற்றை செவி கால்வாய்க்குள் சில துளிகள் விட வேண்டும். இந்த அழுக்கு மென்மையாக மாறியவுடன் கழுவும் நிலைக்கு தயாராக இருக்கும். உங்கள் காது கால்வாய் பகுதி நேராக இருக்கும்படி தலையை சாய்த்துக் கொள்ளுங்கள். ஒரு ரப்பர் பல்ப் சிரிஞ் (விலை மலிவானது, மருந்து கடை அல்லது ஆன்லைன் கடைகளில் கிடைக்கும்) மூலம் வெதுவெதுப்பான நீரை காதுக்குள் செலுத்தவும். இந்த நீர் உடல் வெப்பநிலையில் மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

 நீரை காதுக்குள் செலுத்திய சில நிமிடங்கள் அதே நிலையில் இருக்க வேண்டும். பின்பு எதிர் திசையில் திரும்புவதால் காதில் உள்ள அழுக்கும் நீரும் வெளியேறி விடும். ஒரு டவல் மூலம் அல்லது கூல் செட்டிங்கில் வைத்து ஹேர் ட்ரையர் மூலம் காதுகளை காய விடவும்.

காது_அழுக்கைத்_தடுப்பது_எப்படி?

 காதுகளில் அடைப்பு ஏற்படும்படி உண்டாகும் காது அழுக்கைத் தடுப்பது அவசியம் என்றாலும் இந்த நிலை பற்றி நீங்கள் முற்றிலும் அறிந்து கொள்வது நல்லது. காட்டன் பட்ஸ், மற்றும் மேலே கூறிய இதர பொருட்களை காதுக்குள் நுழைத்து அழுக்கை வெளியேற்ற முயற்சிப்பதால் அழுக்கு மீண்டும் காதின் உட்பகுதிக்குள் ஆழமாக செலுத்தப் படுகிறது.

உங்கள் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போதிய அளவு கிடைக்காதபோது, சுரப்பிகள் அதிக அளவு அழுக்கை உற்பத்தி செய்வதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது ஒமேகா 3 குறைபாடு காரணமாகவும் அதிகரித்த காது அழுக்கு உண்டாகலாம். இதற்கான சில தீர்வுகள் இதோ உங்களுக்காக..

ஒவ்வொரு வாரமும் ஒமேகா 3 சத்து உள்ள மீன்களை சாப்பிடுங்கள். கானாங்கெளுத்தி , சாலமன், ஹெர்ரிங், சார்டின், நெத்திலி ஆகிய மீன்களில் இந்த சத்து அதிகமாக உள்ளது. தாவர உணவுகள் எடுத்துக் கொள்பவர்கள், ஆளி விதை எண்ணெய், சியா விதைகள், வால்நட், சோயாபீன்ஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக