Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 அக்டோபர், 2019

BSNL Diwali Offer: மூன்று மாதங்களுக்கு இலவசம்! ஜியோவை அடித்து நொறுக்கும் பி.எஸ்.என்.எல்!

Image result for bsnl
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதன் தீபாவளி பண்டிகை கால சலுகைளை அறிவித்துள்ளது. அதன் கீழ், 3 மாதங்களுக்கான எக்ஸ்ட்ரா வேலிடிட்டி மற்றும் கூடுதல் டேட்டா போன்ற பல நன்மைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவைகளை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்!




பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்று அழைக்கப்படும் பி.எஸ்.என்.எல் நிறுவனம், நேற்று (வியாழக்கிழமை) அதன் தற்போதைய மற்றும் புதிய பயனர்களுக்கான தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்த திருவிழா கால சலுகையின் கீழ் "நம்ப முடியாத" வேலிடிட்டி நீட்டிப்பு மற்றும் கூடுதல் டேட்டா போன்ற நன்மைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையின் கீழ் கூடுதல் நன்மைகளை பெறும் திட்டங்கள் என்ன? அவைகளின் நன்மைகள் என்ன? இந்த சலுகையானது எப்போது தொடங்கி எந்நாள் வரை நீடிக்கும்? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

நம்ப முடியாத வேலிடிட்டி நீட்டிப்பு:

இந்த புதிய தீபாவளி பண்டிகை கால சலுகையின் கீழ் ரூ.1,699 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகு காலம் ஆனது 455 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதன் செல்லுபடியாகும் காலம் 365 நாட்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்டேட்டட் திட்டங்கள்:

இதேபோல், அரசாங்கத்தினால் நடத்தப்படும் இந்த டெலிகாம் ஆப்ரேட்டர் ஆனது புதுப்பிக்கப்பட்ட ரூ.106 மற்றும் ரூ. 107 ப்ரீபெய்ட் திட்டங்களை அதன் புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

 
எக்ஸ்ட்ரா டேட்டா நன்மைகளை பெறும் திட்டங்கள்:

தவிர கூடுதல் டேட்டா நன்மைகளை வழங்கும் ரூ.186 மற்றும் ரூ.187 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களும் இந்த தீபாவளி பண்டிகை கால சலுகையின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவிற்கு கடும் போட்டி!

ஆகமொத்தம் இந்த தீபாவளி பண்டிகை காலத்தில், பி.எஸ்.என்.எல் அதன் புதிய சலுகையுடன், அதன் போட்டியாளர்கள் ஆன பார்தி ஏர்டெல் மற்றும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராக கடும் போட்டியை கட்டவிழ்த்து விட முடிவு செய்து விட்டதை தெளிவாக பார்க்க முடிகிறது.

 
எப்போது வரை அணுக கிடைக்கும்?

அக்டோபர் 31 வரை மட்டுமே பி.எஸ்.என்.எல்-ன் ரூ.1,699 ப்ரீபெய்ட் திட்டத்தின் மீதான எக்ஸ்ட்ரா வேலிடிட்டி சலுகை அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. .

ரூ.1699-ன் நன்மைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம்:

நன்மைகளை பொறுத்தவரை, ரூ.1,699 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது 2 ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 தினசரி எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது.

உடன் வரம்பற்ற பாடல்களை மாற்றும் திறனுடன் தனிப்பயனாக்கப்பட்ட personalised ring back tone-ற்கான (PRBT) இலவச அணுகலையும் வழங்குகிறது.

ரூ.106 மற்றும் ரூ.107-ன் நன்மைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம்:

பி.எஸ்.என்.எல் ரூ.106 மற்றும் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளை பொறுத்தவரை - நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர்களுக்கு - இரண்டுமே ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் ஆகும்.

 
ரூ.186 மற்றும் ரூ.187-ன் நன்மைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம்:

இறுதியாக ரூ.186 மற்றும் ரூ.187 திட்டங்கள், இப்பொது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டா என்கிற கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது. உடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.

இதன் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். ரூ.187 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளில் unlimited PRBT விருப்பமும் அடங்கும்.

ஹரியானா பி.எஸ்.என்.எல் தளத்தில் காணப்பட்டுள்ளன!

கடைசியாக குறிப்பிடட்டுள்ள நான்கு புதிய சலுகைகளும் (ரூ.186 மற்றும் ரூ. 187, ரூ.106 மற்றும் ரூ.107) சமீபத்தில் பிஎஸ்என்எல் ஹரியானா தளத்தில் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக