>>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 4 அக்டோபர், 2019

    ஒப்போ ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடி விலைகுறைப்பு & கேஷ்பேக் ஆபர்!

     


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    ஒருபக்கம் அமேசான் இந்தியா, ஃப்ளிப்கார்ட் மற்றும் பேடிஎம் போன்ற தளங்களில் தீபாவளி சிற்பபு விற்பனை ஆனது அமோகமாக நடந்து கொண்டிருக்க அந்த பட்டியலில் ஒப்போ நிறுவனமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.


    இந்தியாவில் தீபாவளி பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. பொதுவாக இந்த தீபாவளிக்கி எந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்று தானே யோசிப்போம்! ஆனால் இந்த 2019 தீபாவளிக்கு எத்தனை புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்கலாம் என்று பலர் திட்டம் போட்டு கொண்டு இருக்கிறார்கள்.

    அந்த அளவிற்கு சிறப்பு விற்பனைகளும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் தளங்களில் சிறப்பு விற்பனை நடந்து கொண்டிருக்க பேடிஎம் அதன் தீபாவளி விற்பனையை அறிவித்தது.

    அனைத்திலுமே பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் பிரபலமான ஸ்மார்ட்போன்களின் மீதான அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஒப்போவின் தீபாவளி விற்பனை!

    இந்த பட்டியலில் தற்போது ஒப்போ நிறுவனமும் இணைந்துள்ளது. ஆம் ஒப்போ அதன் தீபாவளி சலுகைகளை அறிவித்துள்ளது. அதில் கேஷ்பேக், நோ காஸ்ட் இ.எம்.ஐ உட்பட பல சலுகைகளின் கீழ், ஒப்போ நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

    அந்த பட்டியலில் ஒப்போ ரெனோ 2, ஒப்போ ஏ9 2020, ஒப்போ ரெனோ 10 எக்ஸ் ஜூம் மற்றும் ஒப்போ கே3 போன்ற ஸ்மார்ட்போன்களும் அடக்கம்.

    டேமேஜ் ப்ரொடெக்ஷன் முதல் ஸ்க்ரீன் ரீப்ளேஸ்மென்ட் வரை!

    ஒப்போ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின்படி, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெனோ 2 தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு Complete Damage Protection வழங்கப்படும் என்றும், ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனிற்கு one-time screen replacement கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

     
    ஆப்லைன் சலுகைகள்!

    கூடுதலாக, இந்தியா முழுவதும் உள்ள ஒப்போ சில்லறை கடைகளில் இருந்து, எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரெனோ 2 தொடரை வாங்கும் நுகர்வோர்களுக்கு, இ.எம்.ஐ பரிவர்த்தனைகள் மற்றும் Consumer Loan-களில் 10 சதவீத கேஷ்பேக் கிடைக்கும் என்றும் ஒப்போ அறிவித்துள்ளது. இதேபோல், ஒப்போ ஏ சீரிஸ் 2020 மீது 5 சதவீத கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் சலுகைகள்!

    இது தவிர ஒப்போ ஏ5 எஸ், ரெனோ, ரெனோ 10 எக்ஸ் ஜூம், ஒப்போ ஏ9, ஒப்போ கே3, ரெனோ 2 சீரிஸ் மற்றும் ஏ சீரிஸ் 2020 ஸ்மார்ட்போன்களை அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் வழியாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நோ காஸ்ட் ஈஎம்ஐ சலுகைகளை ஒப்போ அறிவித்துள்ளது.

    எக்ஸ்சேன்ஜ் சலுகைகள்!

    மேலும் ரெனோ 2 சீரிஸ், ஏ 2020, ரெனோ மற்றும் ரெனோ 10 எக்ஸ் ஜூம் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.7,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் அணுக கிடைக்கும்.

    ரூ.1000 முதல் ரூ.4000 வரை தள்ளுபடி!

    தவிர ஒப்போ கே 3 மற்றும் ஏ3எஸ் ஸ்மார்ட்போன்கள் மீது ரூ.1,000 என்கிற தள்ளுபடியும், ஒப்போ கே1 மீது ரூ.4,000 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கிகளின் உடனடி தள்ளுபடி!

    இந்த எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் சேர்த்து, அமேசான் வழியாக கிடைக்கும் 10% எஸ்பிஐ வங்கியின் உடனடி தள்ளுபடி மற்றும் ஃப்ளிப்கார்ட் வழியாக கிடைக்கும் 10% ஐசிஐசிஐ வங்கியின் உடனடி தள்ளுபடி மற்றும் 10% ஆக்சிஸ் வங்கியின் உடனடி தள்ளுபடி போன்றவைகளையும் நீங்கள் பெறலாம்.

     
    அக். 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்!

    இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்களின் மீதான கேஷ்பேக் சலுகைகள், தள்ளுபடிகள், நோ காஸ்ட் இஎம்ஐ மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் ஆனது வருகிற அக்டோபர் 31, 2019 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக