ஹரிபிரசாத் |
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சென்னையில்
சதுரங்க வேட்டை பட பாணியில் டாக்டர், பேராசிரியை என பலரை ஏமாற்றியுள்ளார் ஐ.டி.ஐ.
படித்த இளைஞர்.
சென்னை
அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் தி.நகர், கண்ணதாசன் சாலை பகுதியைச்
சேர்ந்த சாய்ராஜ் என்பவரின் மகன் விக்னேஷ்ராஜ், கடந்த 2-ம் தேதி புகார் ஒன்றைக்
கொடுத்தார். அதில், ``நான் 2018-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு ஐ.ஏ.எஸ்.
பயிற்சி வகுப்புக்குச் சென்று வருகிறேன். கடந்த 20.6.2019-ல் சென்னை பெசன்ட்
நகரில் 91,000 ரூபாய்க்கு செல்போன் வாங்கினேன். அந்த போனை விற்றுவிட்டு புதிய போன்
வாங்கி முடிவு செய்தேன். இதற்காகப் பொருள்களை விற்கும் இணையதளத்தில் விளம்பரம்
செய்தேன்.
அதைப்பார்த்துவிட்டு
13.9.2019-ல் ஹரிபிரசாத் என்பவர் எனக்குப் போன் செய்தார். 60,000 ரூபாய்க்கு போனை
வாங்கிக் கொள்வதாக என்னிடம் கூறினார். போன் நன்றாக இருந்தால் கூடுதல் விலை தருவதாகவும்
ஹரிபிரசாத் தெரிவித்தார். அவரின் ஆசைவார்த்தையை நம்பி அவர் கூறிய அம்பத்தூர்
தொழிற்பேட்டையில் உள்ள ஹோட்டலுக்கு நானும் என் நண்பரும் சென்றோம். அங்கு
ஹரிபிரசாத்தைச் சந்தித்தேன். ஹோட்டலில் ஜூஸ் குடிக்க எங்களை ஹரிபிரசாத் அழைத்துச்
சென்றார். அவருடன் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்திருந்தார். அந்தப் பெண்ணை
தன்னுடைய சகோதரி மஞ்சு என்று எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
ஜூஸை ஆர்டர் செய்துவிட்டு என்னிடமிருந்த போனை வாங்கி ஹரிபிரசாத் சோதித்துப்பார்த்தார். பிறகு அந்த செல்போனிலிருந்து மஞ்சுக்கு போன் கால் செய்தார். அப்போது ஹோட்டலுக்குள் டவர் கிடைக்கவில்லை என்று கூறிய ஹரிபிரசாத், வெளியில் சென்றார். நானும் சந்தேகத்தின்பேரில் அவருடன் சென்றேன். அப்போது அவர், `என் அக்கா தான் உள்ளே இருக்கிறாரே பிறகு ஏன் நீங்கள் என்னை சந்தேகப்படுகிறீர்கள்.. ஜூஸ் வரும் அதைக் குடியுங்கள். அதற்குள் ஏ.டி.எம்.மிலிருந்து பணத்தை எடுத்துவருகிறேன்' என்று கூறினார். நானும் அதை நம்பி ஹோட்டலுக்குள் வந்தேன். அரைமணி நேரத்துக்கு மேலாகியும் ஹரிபிரசாத் வரவில்லை.
புகாரின் பேரில் அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் விஜயராகவன், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தலைமைக் காவலர் சார்லஸ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ஹரிபிரசாத் பைக்கில் ஹோட்டலுக்குள் வருவதும் பிறகு அங்கிருந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து, அவர் பைக்கில் சென்ற சாலைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, ஹெல்மெட் அணிந்து அவர் சென்றதால் அவரின் முகம் போலீஸாருக்குத் தெரியவில்லை. மேலும், அவரின் வாகன பதிவு எண்ணை வைத்து போலீஸார் விசாரித்தபோது அது, பள்ளிக்கரணை முகவரி எனத் தெரியவந்தது. அங்கு சென்றபோதுதான் ஹரிபிரசாத் குறித்த முழுவிவரங்கள் போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, ஹரிபிரசாத்துடன் ஹோட்டலுக்குச் சென்ற மஞ்சு என்ற பெண் மூலம் போலீஸார் வியூகம் அமைத்தனர். அதில் ஹரிபிரசாத் சிக்கிக்கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி
ஒருவர் நம்மிடம், ``சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத் (30). இவர் மேடவாக்கத்தில்
வாடகை வீட்டில் தங்கியிருக்கிறார். சதுரங்க வேட்டை பட பாணியில் செல்போனை பறித்துச்
சென்ற ஹரிபிரசாத்தை பலவகையில் தேடினோம். அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து அவர் பைக்கில்
சென்ற பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம்.
அப்போது அவர் பைக்குக்குப் பெட்ரோல் போடுவதற்காக ஒரு இடத்தில் ஹெல்மெட்டைக் கழற்றினார்.
அதில் அவரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. பைக்கின் பதிவு எண் முகவரி பள்ளிக்கரணையைக்
காட்டியது. இதனால் அங்கு சென்று விசாரித்தபோது, அந்த பைக் பெண் ஒருவரின் பெயரில் இருந்தது.
அந்தப் பெண்ணும் ஹரிபிரசாத்தால் ஏமாற்றப்பட்டவர் என்பது தெரிந்தது.
'
இதையடுத்து,
பேராசிரியை மஞ்சு மூலம் ஹரிபிரசாத்தைப் பிடிக்க வியூகம் அமைத்தோம். ஹரிபிரசாத்தின்
செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் சிக்னல் மூலம் அவரின்
இருப்பிடத்தைக் கண்டறிய முடியவில்லை. இந்தச் சமயத்தில்தான் பேராசிரியை மஞ்சு,
கூறிய சில தகவல்கள் அடிப்படையில் ஹரிபிரசாத் பதுங்கியிருக்கும் இடம் குறித்த தகவல்
கிடைத்தது. அங்கு சென்று அவரைக் கைது செய்தோம். அவரிடமிருந்து தங்க செயின்கள்,
செல்போன்கள், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். ஹரிபிரசாத் மீது ஏற்கெனவே
கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அவரை சென்னை போலீஸார் குண்டர்
தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலும் அடைத்துள்ளனர்.
ஹரிபிரசாத்
கூறிய தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்து அவரை புழல் சிறையில் அடைத்துள்ளளோம்.
ஆன் லைனில் பொருள்களை விற்பதற்கு விளம்பரம் கொடுப்பவர்கள் கவனமாக இருக்க
வேண்டும்" என்றார்.
ஹரிபிரசாத்திடம்
விசாரித்தபோது, ``ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலை இல்லாத காரணத்தால் இதுபோன்ற மோசடி
வேலையில் ஈடுபட்டதாகக் கூறினார். மேலும், சதுரங்க வேட்டை படத்தைப் பார்த்துதான்
எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்பதைத் தெரிந்துகொண்டேன் என்று கூறினார். பலரை
ஏமாற்றிய பணத்தில் தன்னுடைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு சேலை, மோதிரம், செயின்களை
பரிசாக வாங்கிக் கொடுத்ததாகவும் கூறினார்
ஹரி பிரசாத்திடம் விசாரணை நடத்திய போலீஸாருக்கு அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகமாகவே இருந்துள்ளது. வீட்டுக்கு ஒரே மகனான ஹரிபிரசாத்தின் வாழ்க்கை தடம் மாறியதற்கு அவரின் ஆடம்பர வாழ்க்கையே காரணம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக