Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 29 அக்டோபர், 2019

Vodafone Rs 229 Plan: என்னடா இது ஜியோவின் ரூ.222 க்கு வந்த சத்திய சோதனை?!


  


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


"இனிமேல் இலவச அழைப்புகள் கிடையாது, நிமிடத்திற்கு 6 பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்" என்கிற அறிவிப்பின் விளைவாக ஏற்பட்ட விமர்சனம்ங்கள் மற்றும் எதிர்ப்புகளை மற்ற நிறுவனங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றன.



முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக செயல்படும் முனைப்பின் கீழ், சமீப காலமாக வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சில சுவாரஸ்யமான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.

அதில் ஒன்று தான் வோடபோன் ரூ.229 திட்டம். இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன? செல்லுபடியாகும் காலம் என்ன? இதுபோன்று வேறு என்னென்ன வோடாபோன் திட்டங்கள் உள்ளன? இது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.222 ஆல் இன் ஒன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துடன் போட்டி போடுமா? ஏர்டெல் நிறுவனத்தின் நிலை என்ன? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இதோ!

வோடபோன் ரூ.229 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆனதும் 28 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்கி வருகிறது, ஆக ஜியோவின் ரூ.222 உடன் ஒப்பிடும் போது டேட்டா நன்மையில் எந்த வேறுபாடும் இல்லை!

 

சரி எப்போது எங்கே வேறுபடும்?

வோடாபோனின் இந்த ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு போனஸ் கார்டு வரம்பற்ற திட்டம் ஆகும். அதாவது இது டால்க் டைம் எதையும் வழங்காது. இருப்பினும், வோடபோன் சந்தாதாரர்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவுடன் இந்தியாவிற்குள்ளான வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் ரோமிங் அழைப்புகளை அனுபவிக்க முடியும்.

டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகளை தவிர்த்து இந்த வோடாபோன் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டமானது அதன் சந்தாதாரர்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. தவிர, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் வோடபோன் ப்ளே ஆப் வழியாக இலவச லைவ் டிவி, திரைப்படங்கள் மற்றும் பலவற்றையும் பார்க்க முடியும்.



இதே போல வேறு எதாவது திட்டம் இருக்கிறதா?

இருக்கிறது! ரூ.229 ஐ போலவே வோடபோனின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டமானது இது ஒரு நாளைக்கு 1.6 ஜிபி டேட்டாவையும், மற்றொரு திட்டமான ரூ.199 ரீசார்ஜ் ஆனது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. ரூ.229 ஐ விரும்பாத பயனர்கள் இந்த இரண்டு திட்டங்களையும் கவனத்தில் கொள்ளலாம்.

இது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.222 உடன் போட்டியிடுமா?

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது சமீபத்தில் ரூ.229 என்கிற ஆல் இன் ஒன் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது தற்போது அணுக கிடைக்கும் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் மாற்று ஆகும்.

 
இந்த ரூ .222 திட்டத்துடன், ரிலையன்ஸ் ஜியோ ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா, ஜியோ டு ஜியோ வரம்பற்ற இலவச குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1000 நான்-ஜியோ நிமிடங்கள் (மற்ற நெட்வர்க் உடனான அழைப்புகள்) போன்ற நன்மைகளை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. ஆக வோடாபோனின் ரூ.229 திட்டத்தை ஜியோவின் ரூ.222 க்கு நல்ல சவாலாக அமையலாம்.

மற்றொரு போட்டியாளரான பாரதி ஏர்டெல் நிறுவனத்திடம் வோடபோனின் ரூ.229 மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.222 க்கு போட்டியாக எந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமும் இல்லை என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக