இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஆனது தற்போது சூப்பர் பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கிறது. இது தவிர ரெட்மி கே 20 ஸ்மார்ட்போன் மீதும் தற்காலிக விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றான சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ மீது நிரந்தர விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இந்த ஸ்மார்ட்டான் ரூ.11,999 என்கிற புள்ளியில் இருந்து தொடங்குகிறது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் தொடர்ஆனது இந்தியாவின் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும், கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் ஆனது மில்லியன் கணக்கான யூனிட்களை விற்றுள்ளது.
தக்கவைத்துக் கொள்ளப்பட்ட விலைக்குறைப்பு!
ரெட்மி நோட் 7 ப்ரோ ஆனது கடந்த வாரம் நடந்த ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ரூ.15,999 க்கு பதிலாக ரூ.11,999 (4 ஜிபி + 64 ஜிபி மாறுபாடு) என்கிற தள்ளுபடி விலையை பெற்றது. அந்த விலை வீழ்ச்சி ஆனது நல்ல வரவேற்பை பெற்று உள்ளதாகவும், அது நிலைத்திருக்க போவதாகவும் தெரிகிறது.
எல்லா வண்ண விருப்பங்களும் ஸ்டாக் உள்ளன!
இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து வண்ண விருப்பங்களும் தற்போது ஸ்ட்டாக்கில் உள்ளன என்பதால் குறிப்பிட்ட வண்ணங்களை மட்டுமே தேர்வு செய்யலாம் என்கிற கட்டுப்பாடும் இருக்காது.
ஆகையால் நீங்கள் ஸ்பேஸ் பிளாக், நெபுலா ப்ளூ மற்றும் நெப்டியூன் ரெட் ஆகிய வண்ணங்களில் எதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
ரெட்மி நோட் 7 ப்ரோ வெளியான நாள் முதல் இன்று வரையிலாக சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் நிலைத்து இருக்கிறது. இது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் உடனாக 6 ஜிபி வரையிலான ரேம் கொண்டு இயங்குகிறது.
டிஸ்பிளே பற்றி?
இது 6.3 இன்ச் அளவிலான எல்.சி.டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது, உடன் இது எஃப்.எச்.டி+ தெளிவுத்திறனையும் வழங்குகிறது.
இமேஜிங் பற்றி?
கேமராக்களைப் பற்றி பேசுகையில், ரெட்மி நோட் 7 ப்ரோ ஆனது அதன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதில் 48 எம்பி அளவிலான முதன்மை கேமரா + 5 எம்பி அளவிலான டெப்த் சென்சார் உள்ளது.
முன் பக்கத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ஒரு 12 எம்பி அளவிலான செல்பீ கேமராவால் கொண்டுள்ளது.
பேட்டரி பற்றி?
மேலும் இந்த ஸ்மார்ட்போன் யூ.எஸ்.பி டைப்-சி வழியிலான பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஓஎஸ் பற்றி?
ரெட்மி நோட் 7 ப்ரோ ஆனது Android 9 Pie அடிப்படையிலான MiUI 10 உடன் இயங்குகிறது, விரைவில் அடுத்த பதிப்பிற்கு புதுப்பிக்கப்பட வேண்டும்.
விலைக்குறைப்பிற்கு பின்னால் இருக்கும் காரணம்!
இந்த அதிரடி விலைக்குறைப்பிற்கு பின்னால் ரெட்மி நோட் 8 தொடருக்கான அறிமுகம் என்கிற ஒரு காரணமும் உள்ளது. புதிய ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆனது இந்த அக்டோபர் மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி நோட் 7 ப்ரோவின் வெற்றியாளரான இது ரூ.15,000 என்கிற புள்ளியை சுற்றி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி கே 20 மீதும் விலைக்குறைப்பு!
சுவாரஸ்யமாக, ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் சேர்த்து ரெட்மி கே 20 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாடு ஆன 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக முந்துங்கள்!
தற்போது இதன் விலை ரூ.19,999 ஆகும். ஆனால் மற்ற வேரியண்ட்கள் ஆனது அவற்றின் அசல் விலைக்குத் திரும்பியுள்ளன. இது ஒரு தற்காலிக வீழ்ச்சியாக இருக்கலாம், எனவே நீங்கள் ரெட்மி 20கே ஐ வாங்க திட்டமிட்டு இருந்தால் வேகமாக செயல்படுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக