இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சரியாக 3 வருடங்களுக்கு முன்பு, இதே நாளில்
நவம்பர் 08, 2016 அன்று, நம் இந்திய மக்களோ அல்லது சர்வதேச நாடுகளோ எதிர்பாராத
வகையில், டீமானிட்டைசேஷன் என ஒரு விஷயத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு.
இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் அப்போது
புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாக்
காசானது.
அதற்கு பதிலாக புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய்
நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டன. அவ்வளவு ஏன் அதன் பின் இந்தியாவில்
புழங்கும் எல்லா நோட்டுகளும் புதிதாக விடப்பட்டன.
2000 ரூபாய்
2000 ரூபாய் வந்த புதிதில் இருந்தே பல
சர்ச்சைகள் அதனைச் சுற்றி வட்டமடித்து கொண்டு தான் இருந்தன. இந்த நோட்டில் சிப்
இருக்கிறது, பதுக்கி வைக்க முடியாது, இந்த நோட்டை அழிக்கவே முடியாது என பல
சுவாரஸ்ய கட்டுக் கதைகள் வந்து கொண்டே தான் இருந்தன. இப்போது அந்த 2000 ரூபாய்
நோட்டையும் பணமதிப்பு இழப்பு செய்யச் வேண்டும் என, அரசுக்கு அறிவுரை சொல்லி
இருக்கிறார் முன்னாள் நிதித் துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க்.
விருப்ப ஓய்வு
கடந்த
அக்டோபர் 31, 2019-ல் தான் சுபாஷ் சந்திர கார்க், தன்னுடைய இந்திய ஆட்சிப் பணி (ஐ
ஏ எஸ்) பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதற்கு முன் நிதித் துறையில்
இருந்து, மின்சார துறைக்கு செயலராக மாற்றப்பட்டார். அதன் பின் தான், தன்னுடைய
விருப்ப ஓய்வுக்கான விண்ணப்பத்தை அரசிடம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருப்ப ஓய்வு பெற்ற பின் நேற்று, நவம்பர் 07, 2019 அன்று தன் டிவிட்டர்
பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டு இருக்கிறார்.
இந்த
ட்விட்டர் பதிவில், தன் ப்ளாக் ஸ்பாட்டில் எழுதிய ஒரு பெரிய கட்டுரையின் லிங்கைக்
கொடுத்து இருக்கிறார். "எப்படி இந்தியாவை 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக
வளர்த்து எடுக்க வேண்டும், அதற்கு என்ன மாதிரியான 100 முக்கிய நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும்" எனச் சொல்கிறது சுபாஷ் சந்திர கார்க்கின் பிளாகில் பகிரப்பட்டு
இருக்கும் கட்டுரை. அந்த கட்டுரையின் 82-வது புள்ளியாகத் தான் இந்த 2000 ரூபாயை பண
மதிப்பு இழப்பு செய்யச் சொல்லி இருக்கிறார்.
82-வது புள்ளி
இந்தியாவின்
மொத்த பணப் புழக்கத்தில் இருக்கும், மூன்றில் ஒரு பங்கு நோட்டுக்கள் (மதிப்பு
அடிப்படையில்), இந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் தான். ஏற்கனவே ஒரு பெரிய அளவிலான
புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கப்பட்டு விட்டன. அவை புழக்கத்துக்கு
வருவதில்லை. எனவே இது இந்தியப் பொருளாதாரத்தில், பணப் பரிமாற்றத்துக்கான கரன்ஸியாக
2000 ரூபாய் நோட்டுக்கள் செயல்படுவதில்லை.
சத்தம் இல்லாமல் செய்யலாம்
எனவே
இந்த 2,000 ரூபாய் நோட்டை மட்டும், சத்தம் இல்லாமல் எளிதில் டீமானிட்டைஸ்
செய்துவிடலாம். அதற்கு வங்கியில் இந்த 2,000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்து
வைத்தால் போதும். வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து புதிய
நோட்டுக்களைக் கொடுக்கும் பழக்கம் வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறார். ஆக வங்கிக் கணக்கில்
டெபாசிட் செய்து விட்டு ஏடிஎம்-ல் எடுத்தால் 500 ரூபாய் அல்லது மற்ற ரூபாய்
நோட்டுக்கள் தான் வரும் இல்லையா..?
பணமதிப்பிழப்பு நடக்குமா..?
ஆக
முன்னாள் நிதிச் செயலர், 2,000 ரூபாய் நோட்டுக்களை டீமானிட்டைஸ் செய்ய அரசுக்கு
யோசனைச் சொல்லி இருக்கிறார். ஆனால் இதுவரை மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு
பதிலும் கிடைக்கவில்லை. இந்தியா ஒரு சுதந்திர நாடு தானே, சுபாஷ் சந்திர கார்க் தன்
கருத்தை முன் வைக்கிறார் அவ்வளவு தானே என்று இப்போதே வாதாடத் தொடங்கிவிட்டார்கள்
நெட்டிசன்கள். சுபாஷ் சந்திர கார்க்கின் யோசனை ஏற்றுக் கொள்ளப்படுமா..? 2000
ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பு இழப்பு செய்யப்படுமா..? பொறுத்திருந்து தான் பார்க்க
வேண்டும்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக