இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குறைந்த தூரத்திற்குள் மட்டுமே பயணிக்கக் கூடிய புதிய மின்சார ஸ்கூட்டரை ஒகினவா நிறுவனம் ரூ. 59,900 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் விறனைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்திய வாகனச் சந்தையில் மின்சார ஆற்றல் பெற்ற பல்வேறு வாகனங்களை களமிறக்கி வரும் ஒகினவா நிறுவனம், தற்போது லைட் என்ற பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
லைட் ஸ்கூட்டர் கையள்வதற்கு எளிதாகவும், பயன்படுத்துவதற்கு இலகுவாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் தினசரி தேவைகளுக்காக இந்த ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.
இந்த மின்சார ஸ்கூட்டர், பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் கட்டமைப்புகளுடன் தயாராகியுள்ளது. பட்ஜெட் தேவைகளுக்குள் வாகனங்களை வாங்க விரும்புவோரை மனதில் வைத்து இந்த மின் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒகினாவா லைட் மின்சார் ஸ்கூட்டரில் எல்.இ.டி திறனில் ஒளிரும் முகப்பு மற்றும் பின்விளக்குகள் இடம்பெற்றுள்ளன. தவிர, எல்.இ.டி ஸ்பீடோமீட்டார், புஷ்-பட்டன் செல்ஃப்-ஸ்டார்ட் மற்றும் தானியங்கி எலெக்ட்ரானிக் ஹேண்டில் போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அழ்ம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் உள்ளன.
இந்த மின்சார ஸ்கூட்டரில் கழட்டி மாட்டும் திறன் கொண்ட 40 வோல்ட், 1.2 kWh லித்தியம்-ஐயன் பேட்டரி உள்ளது. இது 250W BLDC எலெக்ட்ரிக் மோட்டாரில் இருந்து ஆற்றலை எடுத்துகொள்ளும். ஒகினாவா லைட் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 முதல் 60 கி.மீ வரை செல்லும். இதனுடைய டாப் ஸ்பீடு மணிக்கு 25கி.மீ.
ஸ்கூட்டரின் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணிநேரங்கள் ஆகும். தவிர, இதனுடைய பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 3 ஆண்டுகள் வரை வாராண்டியை வழங்குகிறது ஒகினாவா நிறுவனம். மேலும் இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம் மூலமாக சார்ஜ் செய்ய முடியும்.
இந்த ஸ்கூட்டரின் முன்பக்கத்திலுள்ள டெலஸ்கோப்பிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கத்தில் இருக்கும் டூயல்-ஸ்பிரிங் ஹைட்ராலிக் ஷாக் அப்ஸபர்கள் ஆகியவை வாகனத்தின் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.
இதுகுறித்து பேசிய ஒகினாவா ஆட்டோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் ஜிதேந்தர் சர்மா, இந்தியாவில் புதிய லைட் ஸ்கூட்டர் அறிமுகம் செய்வது எங்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. கலையுணர்வும், தொழில்நுட்பம் கலந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும்.
இளைய தலைமுறையினரை மனதில் வைத்து ஸ்கூட்டருக்கான வடிவமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு இந்த ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும். அவர்களை கவரும் விதமாக பல்வேறு கட்டமைப்புகள் ஒகினாவா லைட் மின்சார ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.
இந்திய வாகனச் சந்தைக்கு ஒகினாவா நிறுவனம் தயாரித்துள்ள கடைசி வாகனம் இதுவாகும். இலகு ரகத்தில் வாகனங்களை கையாள விரும்புபவர்களுக்கு இந்த ஸ்கூட்டர் சிறந்த தேர்வாக அமையும். இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் அவான் ட்ரென்ட்-இ மாடலுக்கு சரிநிகர் போட்டியாக அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக