Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 23 நவம்பர், 2019

கும்ப ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023

 Image result for கும்ப ராசி  சனிப்பெயர்ச்சி பலன்கள்




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

நிதானமாக செயல்பட்டு நினைத்ததை முடிக்கும் திறமை கொண்ட கும்ப ராசி அன்பர்களே!!

இதுவரை உங்கள் ராசிக்கு 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு அயன சயன போக ஸ்தானமான பனிரெண்டாம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய உள்ளார்.

சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ரண, ருண, ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும்.

சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் மேம்படும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்துக்களை பகிரும்போது சிந்தித்து செயல்படவும். உலக வாழ்க்கை பற்றிய புதிய பரிணாமத்தை உணர்வீர்கள். சிலருடைய அறிமுகம் மாற்றமான சூழலை ஏற்படுத்தும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு சில தடைகளுக்கு பின் சாதகமாக அமையும். பணியில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்காமல் இருப்பது நன்மை அளிக்கும்.

பெண்களுக்கு :

குடும்பத்தாரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். பேச்சுக்களில் சினம் கொண்ட வார்த்தைகளை தவிர்க்கவும். குடும்ப ரகசியங்களை எவரிடமும் பகிர வேண்டாம். கணவரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

மாணவர்களுக்கு :

கல்வி தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். அன்றாடம் நடத்தும் பாடங்களை அன்றைய தினத்தில் எழுதிப் பார்ப்பது நல்லது. கல்வி தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு :

வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் அகலும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்பட்டால் மேன்மையான சூழல் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

அரசியல்வாதிகளுக்கு :

மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். சமூக சேவையில் மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கவும்.

கலைஞர்களுக்கு :

கலைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். பொருளாதார வசதியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உங்களின் முயற்சிகள் மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு சாதகமாக அமையும்.

விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு கால்நடைகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். வேளாண்மை நிலங்களின் மூலம் வருமான வாய்ப்புகள் தேடி வரும்.

வழிபாடு :

தேனியில் உள்ள குச்சனூர் சனீஸ்வர பகவானை வணங்கிவிட்டு அதற்கு பின்புறம் உள்ள வடக்கு பார்த்த தட்சணாமூர்த்தியை வழிபாடு செய்ய நன்மைகள் பெருகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக