இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இப்போதைய நடைமுறைகளில் பிரபலமானது
`சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ எனப்படும் SIP தான். இதை தமிழில்,`சீரான
முதலீட்டுத் திட்டம்’ என்று அழைக்கிறார்கள்.
சிறுசேமிப்பின் அவசியம் பற்றிச் சொல்லித்
தெரியவேண்டியதில்லை. முன்பெல்லாம் சிறுவர் சிறுமியர் உண்டியலில் பணம்
சேர்ப்பார்கள். பின்னர் வங்கிகளில் அஞ்சலகங்களில், தொடர் வைப்புகள் எனப்படும்
`ரெக்கரிங் டெபாசிட்’ கள் செய்யப் பழக்கப்படுத்தப்பட்டார்கள். இதற்காக வங்கிகளே
அழகான உண்டியல்கள் கொடுத்தார்கள். அதற்கும் அடுத்த காலகட்டத்தில் மக்கள் சீட்டு கட்டிச்
சேமித்தார்கள்.
ஆக, எல்லாக் காலங்களிலும் அவ்வப்போது
கிடைக்கும் சிறுதொகைகளை வருங்காலத்துக்காக சேமிக்க வழிகள் கண்டுபிடித்து
வைத்திருந்திருக்கிறார்கள். இப்போதும் அந்தத் தேவை இருக்கவே செய்கிறது.
சேமிக்காமல் ஆகாது.
இப்போதைய நடைமுறைகளில் பிரபலமானது `சிஸ்டமேட்டிக்
இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ எனப்படும் SIP தான். இதைத் தமிழில், `சீரான முதலீட்டுத்
திட்டம்’ என்று அழைக்கிறார்கள்.
உதாரணத்துக்கு, ஒருவர் நாம் முன்பு பார்த்த TCS
பங்குகளில் முதலீடு செய்ய நினைக்கிறார். அவர் முடிவு செய்திருக்கும் தொகை 25,000
ரூபாய். அவர் முடிவு செய்த நாளான 3.12.2018 அன்று அவரது பங்குத் தரகர் மூலம்
வாங்குகிறார். அன்றைய தினம் பங்கின் முடிவு நேர விலை, 1,982 ரூபாய். அவருடைய
பணத்துக்கு அவர் 12 பங்குகள் வாங்கியிருப்பார்.
அவர் செய்ததன் பெயர், `ஒரே தவணை’ அல்லது `லம்ப்
சம்’ வாங்குதல். இதற்கு மாற்றான ஒரு திட்டம்தான், `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட்
பிளான்’.
`சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’-ல்
மொத்தப் பணத்துக்கும் அன்றைக்கு நடக்கும் விலையில் வாங்குவதில்லை; மாதாமாதம்
வாங்குவது என்று முடிவு செய்திருந்தால் அடுத்த 12 மாதங்களுக்கு, மாதம் ஒரு பங்கு
என்ற விகிதத்தில் ஒவ்வொரு பங்காக வாங்குவது. இதில் பல்வேறு தவணை வழிகள்
இருந்தாலும் இப்போதைக்கு மாதத் தவணையை மட்டும் பார்ப்போம்.
2018 டிசம்பர் முதல் வர்த்தக நாள் அன்று, என்ன
விலையாக இருந்தாலும் ஒரு TCS பங்கு வாங்குவது. அப்படியாக 2019 நவம்பர் மாதம் வரை,
12 பங்குகள் வாங்குவது.
இப்படியே செய்தால் அவரிடம், ஓர் ஆண்டு முடிவில்
12 பங்குகள் சேர்ந்துவிடும். 12 பங்குகளின் சராசரி விலை, ஒரே தவணை விலையில்
இருந்து வேறுபடும்.
அந்த வேறுபாடு வேண்டும் என்றுதான் ஒரே நாளில்
ஒரே விலையில் ஒரே தவணையாக வாங்காமல் மாதம் ஒன்றுவீதம் 12 மாதங்கள் வாங்குவது. சில
மாதங்கள் விலை குறைவாக இருக்கலாம். சில மாதங்கள் கூடுதலாக இருக்கலாம். போகப் போக
விலைகள் என்னவாகும் என்று தெரியாததால் இப்படி வாங்குவது.
டிசம்பர் 2018 முதல் நவம்பர் 2019 வரையிலான 12
மாதங்களில், முதல் வர்த்தக நாளில் நடந்த TCS பங்குகளின் முடிவு விலைகள் வருமாறு.
TCS பங்குகளின்
நாள் முடிவு விலைகள்
|
சில
மாதங்கள் விலை குறைவாக இருந்திருக்கிறது. வேறு சில மாதங்களில் விலை அதிகமாக
இருந்திருக்கிறது. இப்படி வாங்கிய 12 பங்குகளின் விலைகளையும் கூட்டினால் வருவது,
மொத்தம் 25,332 ரூபாய். பங்கு ஒன்றின் விலை சராசரியாக 2,111 ரூபாய்.
இந்தக்
குறிப்பிட்ட உதாரணத்தில், முதல் தவணை வாங்கியபின், TCS பங்கு விலை தொடர்ந்து
உயர்ந்திருக்கிறது. அதனால் `லம்ப் சம்’ ஆக வாங்கியிருந்தால் கிடைத்திருக்கக்
கூடியதைவிட, இந்த முறையில் சராசரி விலை சற்றுக்கூடுதல்.
இது
12 மாதங்களுக்கு மட்டுமான கணக்கு. அதுவும் TCS பங்குக்கான விலை குறைவாக இருந்த
டிசம்பரில் ஆரம்பித்ததால் வந்த கணக்கு. இவை எல்லாமே பங்கு, ஆரம்பிக்கும் நாள்,
அதன்பின் நிகழும் மாற்றங்கள் அடிப்படையில் மாறும்.
இதையே
வாரம் ஒரு நாள் என்றும் செய்யலாம். தினசரி அடிப்படையிலும் தினம் ஒரு பங்கு வீதம்
செய்யலாம். அதன் பெயர் `டெய்லி சிப்’.
ஒருவர்
இப்படி, பங்குகளில் முதலீடு செய்யாமல், மியூச்சுவல் ஃபண்டுகளிலும், SIP முறையில்
பணம் போடலாம். மாதம்,1000 ரூபாய் வீதம், ஒரு மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வுசெய்து,
அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு பணம் போடலாம். இது ஒரு சேமிப்பு.
இந்த
சேமிப்பை ஒன்றிரண்டு ஆண்டுகள்வரை மட்டுமே விட்டுவைக்க முடியும். பின் அந்தப்
பணத்துக்குத் தேவை இருக்கிறதென்றால், டெட் ஃபண்டுகளிலும், 5, 10 ஆண்டுகளுக்கு
விட்டுவைக்கக்கூடிய சேமிப்பு என்றால் பங்குகள் சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல்
ஃபண்டுகளிலும் SIP போடலாம்.
முன்பு
பார்த்த `டைரக்ட்’ மற்றும் `ரெகுலர்’ வழிமுறைகளில் ஒன்றைத் தேர்வுசெய்து, அதன்
மூலம் SIP போடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக