Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 நவம்பர், 2019

கேரளா: 20லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி.!

20லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு

 

கேரள மாநிலத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது, அது என்னவென்றால்,கடந்த புதன்கிழமை நடந்து முடிந்த கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கண்ணாடியிழை தகவல் தொழில்நுட்ப (fibre optic information technology) திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

20லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு

குறிப்பாக கேராளாவில் இருக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 20லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் இலவச அதிவேக இன்டர்நெட் வசதி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேசமயம் பிற குடும்பங்களுக்கும் இதே தரத்திலான இணைய வசதி குறைந்த கட்டணத்தில் வழங்க உள்ளது கேரள அரசு.

கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஜசக்

பின்பு ரூபாய் 1,548கோடி செலவிலான இந்த திட்டத்திற்கு அரசு நிர்வாகத்தின் தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது என கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஜசக் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 கேரள மின்சார வாரியமும்
கேரள மின்சார வாரியமும் கேரள தகவல் தொழில்நுட்ப துறையும் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்கும் எனவும்,
இதனுடன கேரள கட்டமைப்பு முதலீட்டு நிறுவனமும் இணைந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

3000 அலுவலகங்கள்

மேலும் இந்த இணையவசதி என்பது அனைத்து குடும்பங்களின் அடிப்படை உரிமை ஆக்கப்பட வேண்டும் என்றும் தமாஸ் ஐசக் நெடுநாட்களாக கூறி வருவது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் 3000 அலுவலகங்கள்
மற்றும் பள்ளிகள் ஆகியவை அதிவேக இணையசேவை பெறும் எனவும், இதன்மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில்
கேரள மாணவர்கள் சாதிக்க வசதியாக இருக்கும் வகையில் உள்ளது.

இணயை சேவை

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தலைமையிலான தொழில் கூட்டமைப்பு இதற்கான ஒப்பந்தம் எடுத்துள்ளது. பின்பு இணயை சேவை வழங்கும் நிறுவனங்களும் இதில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டம் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக