இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சியோமி
நிறுவனம் ஸ்மார்ட்போன் முதல் மாசுபாடு முகமூடி வரை அனைத்தையும் இந்தியச் சந்தையில்
அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது சியோமி நிறுவனம் மி ஆர்கானிக்
டி-ஷர்ட்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.
100% ஆர்கானிக் டி-ஷர்ட்
சீன
நிறுவனமான சியோமி நிறுவனம், 100% ஆர்கானிக் பருத்தியிலிருந்து தயாரிக்கப்பட்ட
இரண்டு டி-ஷர்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆர்கானிக் டி-ஷர்ட்டுகள் இரண்டு
நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்கானிக் டி-ஷர்ட்கள் உலகளாவிய
ஆர்கானிக் டெக்ஸ்டைல் தரநிலைகளால் சான்றளிக்கப்பட்டுள்ளது.
ரிஃப்லெக்ட்டிங் மி லோகோ
இந்த
சியோமி மி டி-ஷர்ட்டின் அதிகாரப்பூர்வ பட்டியலின் படி, நச்சுகள் மற்றும்
பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாத ஆர்கானிக் பருத்தியைப் பயன்படுத்தி
உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சியோமி மி டி-ஷர்ட்டின் பின்புறத்தில் மற்றும்
அதன் ஸ்லீவிலும் ரிஃப்லெக்ட்டிங் மி லோகோக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
டி-ஷர்ட்டிலும் விதை
நீங்கள்
வாங்கும் ஒவ்வொரு டி-ஷர்ட்டிலும் விதையுடன் கூடிய ஒரு பை பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த விதைகளை நீங்கள் நேரடியாக மண்ணில் விதைக்கலாம். விதைகள் விதைக்கப்பட்ட சில
நாட்களில் பாஸில் செடி வளர ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டி-ஷர்ட்
உடன் பருத்தி கோரா பை ஒன்றும் வழங்கப்படுகிறது.
விலை என்ன தெரியுமா?
மி ஆர்கானிக் டி-ஷர்ட்கள் கருப்பு மற்றும்
வெள்ளை என இரண்டு வண்ணங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கிடைக்கிறது. இதன் அளவு
சிறியது முதல் பெரியது வரை வெறும் ரூ. 499 என்ற விலையில் சியோமியின் அதிகாரப்பூர்வ
வலைத்தளம் வழியாகக் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக