இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கடலூர்
மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள தே.பவழங்குடி கிராமத்தில் இரண்டு நாட்களாக
வெறிநாய் ஒன்று சுற்றித் திரிந்து வந்து உள்ளது.இந்த நாய் சாலையில் தனியாக
செல்லுபவர்களை துரத்தி கடித்துக் குதறுகிறது.
அந்த
வெறி நாய் கடித்ததில் சிறுவர் முதல் பெரியவர் வரை 25-க்கும் மேற்பட்டோர்
கார்மாங்குடி அரசு ஆரம்ப நிலையம் மற்றும் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருவதாக கூறுகின்றனர். இதில் ஆறுமுகம் என்ற முதியவர் விருத்தாசலம்
மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த
நாய் கால்நடைகளையும் விட்டுவைக்காமல் கடித்து காயப்படுத்துவதால் , கால்நடைகளை
மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாமல் கிராம மக்கள் வீட்டிலேயே கட்டிவைத்து உள்ளதாக
விவசாயிகள்தெரிவிக்கின்றனர்.
இது
குறித்து கிராம மக்கள் கூறுகையில் , மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளிக்கு
செல்லும் மாணவர்களும் , விவசாயத் தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்களும் நாயிடம்
இருந்து பாதுகாத்துக்கொள்ள கைத்தடியுடன் செல்கின்றன. அந்த நாயை உடனே
பிடிக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக