இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்தியாவில் அதிகப்படியான மக்கள் சந்திக்கும் நோய்களில் முக்கியமானவை முதன்மையானவை
நீரிழிவு. தீராத நோயான இது உடலில் மேலும் பல குறைப்பாட்டை கொண்டு ஆரோக்கியத் தை அதிகமாகவே
பதம் பார்க்கும். இந்த நீரிழிவைக் கட்டுக்குள் கொண்டு வர கடும் பிரயத்தனம் செய்வதுண்டு.
ஆனால் இதைக் கட்டுப்படுத்த இயற்கையும் மருத்துவக்குணங்கள் நிறைந்த பொருள்களைத் தந்திருக்கிறது.
அவற்றில் ஒன்று நாவல் பழம். அதை எடுத்துகொண்டால் நீரிழிவு மட்டுமல்ல மேலும் பல ஆரோக்கிய
நன்மைகளையும் தருகிறது.என்னவென்று பார்க்கலாமா?
நாவல் பழம்
கிராமங்களில் சாலை ஓரங்களில் இயல்பாகவே
இருக்கும் நாவல் மரங்கள் இயற்கை சர்க்கரை நோயாளிகளுக்கு அள்ளித்தந்த கொடை என்று
சொல்லலாம். இதை பிளாக் பிளம், ஜம்பு, ஜாமுன் பழம் என்று அழைக்கிறார்கள்.
சற்று துவர்ப்பு,இனிப்பு, புளிப்பு சுவையுடைய
இந்த பழம் கொட்டையை உள்ளடக்கியது. இந்த மரத் தின் இலை, பட்டை, பழம், கொட்டை, விதை
அனைத்துமே அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்டவையே.
விலை குறைந்த இந்த பழங்களை கிராமங்களில் அதிகம்
பார்க்கலாம். இதனுடைய சத்துகளை இன்று பரவலாகவே மக்கள் அறிந்திருப்பதால் இன்று
நகரங்களிலும் மிகப்பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் கூட பார்க்கலாம்.
சத்துகள்
நாவல் பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து,
பாஸ்பரஸ், சோடியம், வைட்டமின் சத்து, மெக்னீசியம் தாமிரம் போன்ற சத்துகள்
நிறைந்திருக்கின்றன. உடலில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், உடலில்
எலும்பை வலுவாக்கவும் இந்த பழத்தை தவிர்க்காமல் எடுத்துகொள்ள வேண்டும்.
இதை சாப்பிடும் போது தொண்டை கட்டு ஏற்படுவது
போல் இருக்கலாம். ஆனால் உண்டாகாது. அதே நேரம் அதிக சத்துகள் இருக்கிறது என்று
அதிகம் எடுத்துகொள்ளவும் கூடாது. நாளொன்று பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டும்
எடுத்துகொள்ள வேண்டும்.
நீரிழிவுக்கு நல்லது
உடலில் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின்
அளவை குறைக்க இந்த பழம் உதவுகிறது. இதிலி ருக்கும் குளுக்கோசைடு ஸ்டார்ச்
சர்க்கரையாக மாறுவதைத் தடுக்கிறது. அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் இந்தப்பழத்தை
அவசியம் எடுத்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். நீரிழிவு
மருத்துவர்கள்.
இதிலும் சிறந்தது இதிலிருக்கும் கொட்டைகள்.
நாவல்பழத்தை சாப்பிட்டு முடித்ததும் கொட்டை யைத் தூக்கி தூர எறியாமல் அதை
சேகரித்து வையுங்கள் கைப்பிடி அளவு கொட்டை இருந்தாலும் அதை எடுத்து நிழலில்
உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்ளுங்கள். தினமும் ஒரு கிராம் அளவு வீதம் இந்தப்
பொடியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதை காணலாம்.இதை
வெறும் வயிற்றில் எடுத்துகொள்ள கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இரத்த சுத்திகரிப்பில் நாவல் பழம்
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் நாவல்
பழத்தின் கொட்டைகளை அப்படியே அரைத்து வடி கட்டி குடிக்கலாம். இப்படி
குடிப்பவர்களின் இரத்த அழுத்தம் குறிப்பிட்ட சதவீதம் குறைகிறது என்று
கண்டறிந்துள்ளது ஆய்வு ஒன்று.
நாவல்பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடெண்ட்
ரத்தத்தை சுத்தப்படுத்தும்.இரத்தம் விருத்தி அடை யும். கழிவுகளை வெளியேற்றும்.
வேலையை செவ்வனே செய்கிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தின்
தசைகளை வலுப்படுத்துகிறது.
வயிற்றுப்பிரச்சனை
வயிற்றில் இருக்கும் குடல், இரைப்பை வலுவாகும். வயிற்றுப்போக்கு, குடல் புண்கள் போன்றவற் றையும் இந்த கொட்டை குணமாக்கும். இவை தவிர கல்லீரல் கோளாறுகள் சரி செய்யும். மஞ்சள் காமாலை குணப்படுத்தும். மண்ணீரல் வீக்கம் இருப்பவர்கள் நாவல் பழ கொட்டையை பொடி செய்து வைத்து தினமும் ஒரு டீஸ்பூன் தேனில் கால் டீஸ்பூன் பொடி சேர்த்து குடித்து வந்தால் மண் ணீரல் பிரச்சனை, மண்ணீரல் வீக்கம் சரியாகும்.
இதை வளரும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். சிறு
பிள்ளைகளுக்கு வயிற்றுப்போக்கு உண்டா கும் போது சிட்டிகை பொடியை தேனில் குழைத்து
சாப்பிடலாம். இதனால் பற்களும், ஈறுகளும் சுத்த மடையும்.
ரத்தப்போக்கு
மாதவிடாயில் அதிகளவு இரத்தப்போக்கு
கொண்டிருக்கும் பெண்கள் அதை கட்டுப் படுத்த இந்த வைத்தியத்தை கடைப்பிடிக்கலாம்.
கொட்டையை பொடி செய்து இதனோடு நாவல் மர பட்டையை யும் பொடி செய்து ஒரு தம்ளர் நீரை
கொதிக்கவைத்து இந்த பொடியை சேர்த்து வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவந்தால்
இரத்தப்போக்கு படிப்படியாக குறைய தொடங்கும். அளவுக்கடந்த இரத் தப்போக்கு இருக்கும்
போது மட்டுமே இதை எடுத்துகொள்ளுங்கள்.
சிறுநீர் பெருக்கி
உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதிலும்
இது முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு பாதிப் பால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது
குறையும். சிலருக்கு சிறுநீர் தொற்று இருப்பதால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்
உண்டாகும். சிறுநீர்க் கடுப்பு பிரச்சனை இருப்பவர்கள் 10 நாள் வரை தொடர்ந்து இந்த
பொடியை நீரில் கலந்து குடித்துவரலாம்.
நாவல் கொட்டையை இலேசாக வறுத்து பொடியாக்கி
அதையும் தேநீராக்கி குடிக்கலாம். நாவல் பழங்கள் அதிகமாக கிடைக்கும் காலங்களில் இதை
வாங்கி பழங்களை சாப்பிட்ட கையோடு கொட்டைகளை தூர எறியாமல் நிழலில் உலர்த்தி
பொடித்துவைத்து கொள்ளுங்கள்.
குறிப்பு:
நாவல் பழங்களின் பயன்களை உடனடியாக பெறவேண்டும்
என்று அளவுக்கதிகமாக சாப்பிடவும் கூடாது. இதுகுளிர்ச்சியை உண்டாக்கும் பழம்
என்பதால் குழந்தைகளுக்கும் அதிகம் கொடுக்க கூடாது என்பதையும் நினைவில்
கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக