Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 12 நவம்பர், 2019

நெட்பிளிக்ஸ் இந்தியாவின் வளர்ச்சி 700% அதிகரிப்பு..!

நெட்பிளிக்ஸ் இந்தியாவின் வளர்ச்சி 700% அதிகரிப்பு..! 
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 உலகின் மிகப்பெரிய பிரபலமான நிறுவனமான நெட்பிளிக்ஸ், அதன் இந்திய நிறுவனம் கடந்த 2018 - 2019ம் ஆண்டில் 700 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.
 இதற்கு முக்கிய காரணம் உள்ளூர் வாடிக்கையாளர்களை விரிவுபடுத்தியதன் மூலமும், சந்தாரர்களை அதிகப்படுத்தியதாலும் இவ்வளர்ச்சியை கண்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் வருவாய் கடந்த 2019ம் நிதியாண்டில் 466.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இதே இதன் நிகரலாபம் 5.1 கோடி ரூபாயாக உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த நிறுவனம், கடந்த 2018ம் நிதியாண்டில் 58 கோடி ரூபாய் வருவாயும், இதே 20 லட்சம் ரூபாய் லாபத்தில் மட்டுமே இருந்துள்ளது.
மேலும் இந்த நிறுவனம் தற்போது உள்ளூர் நிகழ்வுகளை வீடியோக்கள் வெளியிடுவது, இது தவிர ஏர்டெல் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதெல்லாம் சந்தையை விரிவுபடுத்த உதவியதாக கூறப்படுகிறது.
மேலும் நெட்பிளிக்ஸ் தற்போது 3 - 4 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது மொபைல் ஒன்லி பிளான் 199 ரூபாய் ஆரம்பித்த பின்னரே இந்த வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நெட்பிளிக்ஸூக்கு சுமார் 300 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் இருப்பதாகவும், இது 2023ல் 550 மில்லியன் வாடிக்கையாளர்களாக அதிகரிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
கலிபோர்னியாவை கொண்ட இந்த நிறுவனம் கடந்த 2016 ஜனவரியில் இந்திய சந்தைக்குள் நுழைந்தாலும், கடந்த ஏப்ரல் 2017ல் எல்.எல்.பி ஒரு வரையறுக்கப்பட்ட கூட்டாளராக பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2012ல் வெறும் ஒன்பது நிறுவனங்களே இருந்த நிலையில், தற்போது 39 வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நெட்பிளிக்ஸூக்கு டிஜிட்டல் வீடியோக்களை வாடிக்கையாகர்கள் குறைவாக இருக்கிறார்கள். ஏனெனில் இதன் கட்டணம் அதிகம் என்றும், இதே உள்ளூர் மொழிக்கு குறைந்த கட்டணம் என்றும் கூறப்படுகிறது.
இதன் மாத சந்தா 500 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. மேலும் இதன் 650 மற்றும் 800 திட்டத்தில் பல பயனர்களையும் ஒரே நேரத்தில் பார்ப்பதையும் அனுமதிக்கின்றன.
இதே சந்தையில் நான்கில் ஒரு பகுதியை கட்டுபடுத்தும் ஸ்டார் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் தளமான ஹாட்ஸ்டார், விஐபி திட்டத்தை 365 ரூபாய்க்கும், இதே ஆண்டு பிரிமீயம் 999 ரூபாயாகவும், அமேசான் பிரைம் மாதந்திர கட்டணம் 129 ரூபாய்க்கும், இதே ஆண்டு கட்டணம் 999 ரூபாய்க்கும், இதே ஆப்பிள் டிவி மாதம் 99 ரூபாய்க்கு அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், இது இந்த இணைய சந்தையில் கடும் போட்டியை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக