பல பில்லியன் டாலர் மதிப்புடைய டிஸ்னி
நிறுவனம், தற்பொழுது தனது சொந்த ஸ்ட்ரீமிங் சேவையை அதிகாரப்பூர்வமாக
அறிமுகப்படுத்தியுள்ளது. டிஸ்னி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்ட்ரீமிங்
சேவைக்கு டிஸ்னி பிளஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
நெட்ஃபிலிக்ஸ், அமேசான்-க்கு போட்டியாக
டிஸ்னி பிளஸ் ஸ்ட்ரீமிங்
நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோக்கள், எச்.பி.ஓ,
ஹுலு மற்றும் ஆப்பிள் டிவி பிளஸ் போன்ற ஸ்ட்ரீமிங் நிறுவனங்களை டிஸ்னி பிளஸ்
நேரடியாகத் தாக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஸ்டார் வார்ஸ் மற்றும்
எம்.சி.யுவிலிருந்து பிரத்யேக உள்ளடக்க சீரிஸ்கள், படங்கள் மற்றும் பல நன்மைகளுடன்
டிஸ்னி பிளஸ் ஸ்ட்ரீமிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நெட்ஃபிக்ஸ்
போன்று அதிக கட்டணம் இல்லை
நெட்ஃபிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் எச்.டி
அனுபவத்திற்கு என்று தனி கட்டணம் மற்றும் முழு எச்.டி அனுபவத்தை அனுபவிக்க அதிக
கட்டணம் என்று வெவ்வேறு அதிக கட்டங்களை செலுத்த வேண்டியிருக்கும், ஆனால் டிஸ்னி
பிளஸ் சேவையில் முழு எச்.டி அனுபவம் அனைத்தையும் ஒரே தொகுப்பில் உள்ளடக்கி அறிமுகம்
செய்துள்ளது.
4K தரத்தில் ஒரே
நேரத்தில் 4 சாதனம்
தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களில் டால்பி
அட்மோஸ் மற்றும் டால்பி விஷன் மூலம் 4K அல்ட்ரா எச்டியில் ஒரே நேரத்தில் 4 சாதனம்
வரை பயனர்கள் ஸ்ட்ரீமிங் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதலாக, ஆஃப்லைன்
பார்வைக்கான உள்ளடக்கம் மற்றும் பதிவிறக்குவதற்கான விருப்பத்தையும் இந்த டிஸ்னி
பிளஸ் சேவை வழங்குகிறது.
அவென்ஜர்ஸ் சீரிஸ்,
நேஷனல் ஜியோகிராஃபி சீரிஸ்
அவென்ஜர்ஸ் சீரிஸ், ஸ்டார் வார்ஸ் சீரிஸ்,
நேஷனல் ஜியோகிராஃபி சீரிஸ், தி சிம்ப்சன்ஸ், அவதார் போன்ற தொடர்கள் மற்றும் ஸ்டார்
வார்ஸ் கதை அடிப்படையிலான தொலைக்காட்சி நிகழ்ச்சி, தி மாண்டலோரியன், தி குளோன்
வார்ஸ், தி ஃபால்கன், தி வின்டர் சோல்ஜர் மற்றும் எம்.சி.யுவில் இருந்து ஹாக்கி
போன்ற பல டன் அசல் உள்ளடக்கங்களை குறைந்த விலையில் வழங்குகிறது.
ஆண்ட்ராய்டு மற்றும் iOS
ஆப்ஸ்
எக்ஸ்பாக்ஸ் ஒன், பிளேஸ்டேஷன் 4, ஆப்பிள் டிவி,
ஃபயர் டிவி, ஆண்ட்ராய்டு சாதனங்கள், iOS சாதனங்கள், ஐபாட் சாதனங்கள், சாம்சங்
டிவிகள், எல்ஜி டிவிகள், குரோம் காஸ்ட் மற்றும் வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு
வகையான சாதனங்களை டிஸ்னி பிளஸ் சேவை தற்பொழுது ஆதரிக்கிறது.
குறைந்த விலையில் மாத
சந்தா
முதல் கட்டமாக டிஸ்னி பிளஸ் சேவை அமெரிக்கா,
கனடா மற்றும் நெதர்லாந்தில் ஆகின நாடுகளில் இன்று முதல் வெறும் மாதம் ரூ.500 என்ற
மாத சந்தா விலையில் கிடைக்கிறது. அடுத்தகட்டமாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில்
நவம்பர் 19ம் தேதி, டிஸ்னி பிளஸ் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.
வருடாந்திர சந்தா எவ்வளவு தெரியுமா?
அதனை தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து
மற்றும் ஜெர்மனி ஆகிய இடங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் எப்பொழுது
அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. டிஸ்னி பிளஸ்
சேவைக்கான வருடாந்திர சந்தா இந்திய மதிப்பில் வெறும் ரூ.5000 என்பது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக