இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அமெரிக்காவை
பழிவாங்கப்போவதாக ஐ.எஸ். தலைவர் அறிவித்திருக்கும் நிலையில் அமெரிக்க மாணவர் அந்த
அமைப்புக்க உதவியதாகக் கைதாகியுள்ளார்.
ஐ.எஸ். அமைப்புக்கு ‘கோடிங்’ எழுதிய
சிகாகோ மாணவர் கைது
ஹைலைட்ஸ்
- அதிகாரிகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளைப் போல நடித்து ஒசாட்சின்ஸ்கியோடு தொடர்பில் இருந்துள்ளனர்.
- பயங்கரவாதிகளின் தகவல்களைப் பாதுகாக்க தாமஸ் மென்பொருள் உருவாக்கியிருக்கிறார்.
அமெரிக்காவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்ப்புக்கு
உதவியதாக சிகாகோவைச் சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டவர்கள் குறித்த தகவலைப் பாதுகாப்பதற்கு தொழில்நுட்ப உதவி செய்ததாக இந்த மாணவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தாமஸ் ஒசாட்சின்ஸ்கி என்ற அந்த மாணவர் சிகாகோவைச் சேர்ந்தவர்.
சமூக ஊடகங்களில் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் தகவல்கள் அவற்றில் நீக்கப்படாமல் இருக்கவும், பரவவும், தானாகவே பேக்அப் (Backup) செய்து பாதுகாக்கவும் தாமஸ் மென்பொருளை உருவாக்கியிருக்கிறார்.
எஃப்.பி.ஐ. எனப்படும் அமெரிக்க உளவு அமைப்பின் அதிகாரிகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளைப் போல நடித்து ஒசாட்சின்ஸ்கியோடு தொடர்பில் இருந்துள்ளனர். அப்போது அவர் அதிகாரிகளிடம் தனது மென்பொருளுக்கு எழுதிய நிரல்களைக் காட்டியுள்ளார்.
இதனையடுத்த தாமஸை அவர்கள் கைது செய்துள்ளனர். அவர்மீது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை அழிக்க அமெரிக்கா ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளில் வான்தாக்குதல்களை நடத்திவருகிறது. அண்மையில் இந்த அமைப்பின் தலைவராக இருந்த பாக்தாதியை அமெரிக்கப் படை சுற்றி வளைத்து தற்கொலை செய்துகொள்ள வைத்தது.
பாக்தாதிக்குப் பின் ஐ.எஸ். அமைப்புக்கு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அல்-குரைஷி பாக்தாதி மரணத்துக்குக் காரணமான அமெரிக்காவை பழிவாங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக