இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
முன்னணி,
பிஸ்கட் உற்பத்தி நிறுவனமான பிரிட்டானியா, தனது புதிய தயாரிப்புகளை சுமார் 9 முதல்
12 மாதங்கள் கழித்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் அதிக அளவுக்கு பிஸ்கட் பொருட்களை வாங்குவது இல்லை என்பது இதற்கு காரணமாக
கூறப்படுகிறது.
குட்டே
உள்ளிட்ட பிஸ்கெட் பொருட்கள்தான் பிரிட்டானியாவின் 75 சதவீத அளவுக்கான விற்பனையில்
பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், நிறுவன மேலாண் இயக்குநர், வருண் பெர்ரி தங்கள்
நிறுவன விற்பனை நிலவரம் பற்றி செய்தியாளர்களிடம் இன்று பேசினார்.
டெய்ரி
மற்றும் பேக்கரி பொருட்களை சந்தைப்படுத்தி வரக்கூடிய பிரிட்டானியா நிறுவனத்தின்,
இரண்டாவது காலாண்டு நிகர விற்பனை 5.88 சதவீதம் உயர்வடைந்து 3072.91 கோடி என்ற
அளவில் இருக்கிறது என அவர் தெரிவித்தார்.
தேவை
குறைவு
இது,
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு விகிதமாகும். முந்தைய ஆண்டின் இதே
காலகட்டத்தில் ரூ.2854.81 என்ற அளவில் அதன் விற்பனை வருவாய் இருந்தது. இதுபற்றி
அவர், மேலும் கூறுகையில், நகர்ப்புற பகுதிகளை விடவும் கிராமப்புற பகுதிகளில்
எங்கள் தயாரிப்புகளுக்கான தேவை குறைந்த அளவில் வளர்ந்து வருகிறது. கிராமப்புறங்களில்
நிலவக்கூடிய இந்த மந்த நிலையைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று
நம்புகிறோம்.
மெல்லமெல்ல அறிமுகம்
பொருளாதார
மந்தநிலை காரணமாக போதிய அளவுக்கு நுகர்வு இல்லை என்பதை கருத்தில் கொண்டு எங்களது
புதிய தயாரிப்பு அறிமுகங்களை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம். நாங்கள் புதிய
தயாரிப்புகளை அறிமுகம் செய்தபடிதான் இருக்கிறோம். இருந்தாலும் மெல்லமெல்ல இதனை
செய்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
கிராமங்கள்
பேரசூட்
எண்ணை, சஃபோலா ஆயில் போன்றவற்றை உற்பத்தி செய்யும், மேரிகோ நிறுவனத்தின் மேலாண்
இயக்குநர் சவுகதா குப்தா இதுபற்றி கூறுகையில், மக்கள் கையில் பணப்பற்றாக்குறை
இருப்பது வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக உணர்கிறோம். குறிப்பாக மொத்த
சந்தையில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் இதன் தாக்கம்
இன்னும் அதிகமாக இருக்கிறது
ஆன்லைன்
வணிகம் தூள்
அதேநேரம்
ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்ட புதுவகை வணிகம் நல்ல வேகத்தில் சென்று கொண்டு
இருக்கிறது. புதிய பொருட்களை அறிமுகம் செய்வதை விடவும் இப்போது உள்ள பொருட்களை
இன்னும் மேம்படுத்துவதில் மட்டும் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு
அவர் தெரிவித்தார். முன்னதாக பார்லே நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் அதிக
பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் அளவுக்கு மந்தநிலை இருப்பதாக கூறியது. ஆனால்,
அந்த காலாண்டில், அதன் லாபம் நன்கு அதிகரித்து இருந்ததையும் மறக்க முடியாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக