Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 நவம்பர், 2019

விஆர்எஸ் திட்டம் பற்றி பிஎஸ்என்எல்,எம்டிஎன்எல் ஊழியர்களிடம் பேசுங்கள்: மத்திய அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

Image result for பிஎஸ்என்எல்,எம்டிஎன்எல்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



இழப்பில் செயல்பட்டுவரும் பிஎஸ்என்எஸ்,எம்டிஎன்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் விருப்ப ஓய்வு திட்டம்(விஆர்எஸ்) பற்றி பேசி, வெற்றிகரமாக நிறைவேற்றுங்கள் என்று அதிகாரிகளுக்குத் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவுறுத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களின் மறுமலர்ச்சிக்கான நிதித்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதில் ஊழியர்களுக்கான விஆர்எஸ் திட்டமும் அடங்கும். இரு பொதுத்துறை நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்து நிறுவனத்தின் செலவைக் கட்டுப்படுத்துவது நோக்கமாகும். தற்போது 50 வயதுக்கு மேலாகஇருக்கும் ஊழியர்களுக்கு விஆர்எஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விஆர்எஸ் திட்டத்துக்கு ஊழியர்கள் 2020-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. விஆர்எஸ் செட்டில்மென்டுக்காக மத்திய அரசு ரூ.17,160 கோடியும், ஓய்வுக்கால சலுகைகளுக்காக ரூ.12,768 கோடியும் வழங்க உள்ளது.
தற்போது பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 1.76 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள், இதில் 1.06 லட்சம் ஊழியர்கள் 50வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த திட்டத்தைச் செயல்படுத்தினால், 80 சதவீதம் ஊழியர்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எம்டிஎன்எல் நிறுவனத்தில் 22ஆயிரம் ஊழியர்கள் இருக்கிறார்கள். பிஎஸ்என்எல் வருமானத்தில் 75 சதவீதம் ஊழியர்களின் ஊதியத்துக்குச் செலவாகிறது என்றால், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு வருமானத்தில் 87 சதவீதம் ஊதியத்துக்குச் செலவாகிறது என்பதால், விஆர்எஸ்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், " கடந்த வெள்ளிக்கிழமை பிஎஸ்என்எஸ், எம்டிஎன்எல் வாரியத்தின் அதிகாரிகளை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சந்தித்துப் பேசினார். அப்போது ஊழியர்களுடன் முறைப்படி பேசி விஆர்எஸ் திட்டத்தைக் கண்டிப்பாகச் செயல்படுத்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி 53.5 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் மீதமுள்ள வேலைநாட்கள் ஊதியத்தில் 125 சதவீதம் பெறுவார்கள். 50 முதல் 53.5 வயதுள்ள ஊழியர்கள் தங்களின் மீதமுள்ள பணிக்காலத்தில் 80 முதல் 100 சதவீதம் பணம் பெறுவார்கள்.
தற்போது 55 வயதுக்கு மேல் உள்ள ஊழியர்கள் விஆர்எஸ் திட்டத்தைத் தேர்வு செய்தால், ஓய்வூதியம் 60 வயது அடைந்தபின்தான் தொடங்கும். தற்போது 55 வயதுஅல்லது அதற்குக் குறைவான வயதுள்ள ஊழியர்கள் விஆர்எஸ் திட்டத்தைத் தேர்வு செய்தால் 6 -வது ஆண்டில் இருந்து அதாவது 2024-25-ம் ஆண்டில் இருந்து ஓய்வூதியம் தொடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக