
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அமேசான் நிறுவனம் இந்தியாவில் புதிய புதிய
திட்டங்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டு வந்தவண்ணம் உள்ளது என்றுதான்
கூறவேண்டும். அதன்படி அமேசான் இந்தியப் பயனாளர்கள் இனி அமேசான் ஆப் மூலமாகவும்
திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யகொள்ள
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் பயன்படுத்தும்
ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான், புக் மை ஷோ உடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இதன் மூலம்
அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது இதர பயனாளர்களும் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ள
முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திரைப்பட டிக்கெட் மட்டுமல்லாது புக்
மை ஷோ மூலம் முன்பதிவு செய்யக்கூடிய அத்தனை நிகழ்வுகளுக்கும் அமேசான் மூலமே
டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும். அமேசான் ஆப் மூலம் ஏற்கனவே மொபைல் ரீசார்ஜ்,
விமான டிக்கெட்,பில் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு
ரீசார்ஜ் செய்யும் வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சேவையை மொபைல் ஆப் அல்லது
மொபைல் இணையம் மூலமாக மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தகவல் கிடைத்துள்ளது. பின்பு
இந்த சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதில் அமேசான் பே மூலமாகவும், டிஜிட்டல்
பேமன்ட் முறைகளிலும் பணம் செலுத்த முடியும் என்றும், ஐசிஐசிஐ அமேசான் பே கிரெடிட்
கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 2சதவிகிதம் கேஷ்பேக் சலுகை
கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்
வெளியீட்டு ஆஃபராக 200ரூபாய்க்கு அதிகமான தொகையில் டிக்கெட் முன்பதிவு செய்தால்
200ரூபாய் கேஷ்பேக் ஆஃபர் பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் ஒரு
பயனாளருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக