இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆதிசேசனுக்கும், வாயு பகவானுக்கும்
நடந்த போட்டியில் சிதறிய திருவேங்கடமலையின் ஒரு பகுதிதான் தான்தோன்றிமலையாகும்.
இங்கே பக்தர்கள் அனைவரும் வேண்டிய அருளை தந்து கல்யாண வெங்கட்ரமணர் அருள்புரிந்து
வருகிறார். இக்கோவில் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சுவாமி : கல்யாண வெங்கட்ரமணர்.
உற்சவர் - ஸ்ரீநிவாசர்.
அம்பாள் : ஸ்ரீதேவி பூமிதேவி.
ஊர் - தான்தோன்றிமலை.
தலவரலாறு
:
சுசர்மா என்னும் பக்தன் தனது மனைவியுடன் குழந்தை
பாக்கியம் வேண்டி திருப்பதிக்கு யாத்திரை மேற்கொண்டார். யாத்திரையின் போது
காவிரிக்கரையில் தங்கி இருந்தார். அப்போது நாரதர் கனவில் தோன்றி திருமக்கூடலூர்
என்ற கூடுதுறைக்கு செல்லுங்கள். அங்கு உங்களைச் சிலர் வரவேற்பர் என்று சொன்னதைத்
தொடர்ந்து அங்கு சென்றனர். அங்கு தச்சர்கள் இருந்தனர்.
அவர்கள் சுசர்மாவை வரவேற்று கல்வேலை நடக்கும்
இம்மலைக்கு அழைத்துச் சென்ற போது மலையில் பிரகாசமான ஒளி ஒன்று கிளம்பியது.
இதனையடுத்து பாறை பிளவுண்டு பெருமாள் காட்சி தந்தார். கேட்ட வரத்தையும் அருளையும்
தந்தார். இவ்வாறு பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார்.
தலச்சிறப்பு
:
இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். இங்கே கல்யாண வெங்கட்ரமணர் திருக்கல்யாண வைபவம் மிகவும்
சிறப்பாக நடைபெறுகிறது.
இந்த கோவில் 3000 ஆண்டுகள் பழமையான
குடைவரைக் கோவிலாகும்.
இந்தக் கோவிலுக்கு தென்திருப்பதி என்ற சிறப்பு
பெயரும் உண்டு.
திருவிழாக்கள் :
சித்திரை, புரட்டாசி, மாசி பெருந்திருவிழா
நடைபெறுகிறது.
பிராத்தனை
:
குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறப்பிடம்
பெற, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, நோய் தீர இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்
:
பிரார்த்தனை நிறைவேறியதும்
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, துளசிமாலை, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு
செய்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக