இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கடிகாரம்
மற்றும் கைக்கடிகாரம் உற்பத்தி செய்யும் நிறுவனமானது ஸ்விட்சர் லாண்டில் 1839 ஆம்
நிறுவப்பட்டது. அதன் பின் ஜெனீவாவில் 1932 முதல் ஸ்டெர்ன் குடும்பத்தால்
நடத்தப்பட்டு வருகிறது. உலகின் மிகவும் ஆடம்பரமிக்க நிறுவனங்களில் ஒன்றாக
கருதப்படும் படேல் பிலிப் நிறுவனம் தயாரிக்கப்படும் ஒவ்வொரு கைக்கடிகாரமும் சுமார்
5 மில்லியன் டாலருக்கும் மேல் விற்கப்படுகிறது.
8 ஆண்டுகள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும்
கைக்கடிகாரம்
கடந்த 2014 ஆம் ஆண்டு ஹென்றி கிரேவ்ல் சூப்பர்
காம்ப்ளிகேஷன் என்றழைக்கப்படும் கைக்கடிகாரம் சுமார் 2.13 கோடி டாலர் அதாவது ரூ.
131 கோடி ஏலத்திற்கு போனது. இந்த கடிகாரமானது 1925 ஆம் ஆண்டு படேக் பிலிப்
நிறுவனத்திடம் ஹென்றி கிரேவ்ஸ் என்றவர் உருவாக்கித்தருமாறு கேட்டுள்ளார். இந்த
கைக்கடிகாரம் வடிவமைப்பதற்கு 3 ஆண்டுகளும், தயாரிப்பதற்கு 5 ஆண்டுகளும் ஆனதாக
கூறப்படுகிறது. இந்த கடிகாரமானது 2.31 கோடி டாலர் ஏலத்திற்கு விடப்பட்டு உலக சாதனை
படைத்தது.
அதிக விலை ஏலத்துக்கு போன கைக்கடிகாரம்
ஒரு காலத்தில் பால் நியூமன் என்பவருக்கு சொந்தமான ரோலக்ஸ்
டேடோனா என்ற கைக்கடிகாரம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த
கைக்கடிகாரமானது 17.7 மில்லியன் டாலர் ஏலத்தில் விற்கப்பட்டது. இதையடுத்து முந்தைய
சாதனையை முறியடித்து அதிக விலை ஏலத்துக்கு போன கைக்கடிகாரம் என்ற பெருமையை
கைப்பற்றியது
ரூ.222 கோடிக்கு ஏலம் விடப்பட்ட கைக்கடிகாரம்
இந்த நிலையில், படேக் பிலிப்பின் நிறுவனத்தின் மதிப்புமிக்க
கைக்கடிகாரமான படேக் பிலிப் கிராண்ட்மாஸ்டர் சிம் 6300A-010 என்ற கைக்கடிகாரம்
ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த கடிகாரமானது எஃகு மூலம் தயாரிக்கப்பட்டது. இதில்
நான்கு இலக்கு ஆண்டு காட்சி, 24 மணி நேரம் மற்றும் நிமிட காட்டி
அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தர காலண்டர் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.
இந்த கடிகாரமானது ஏலத்திற்கு விடப்பட்ட சில மணி நேரங்களில் விலை உயர்ந்து கொண்டே
போனது. இறுதியாக 31 மில்லியன் டாலர்(ரூ. 222 கோடி) என ஏலம் எடுக்கப்பட்டது.
இதையடுத்து இது அனைத்து கைக்கடிகாரத்தை விடவும் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட கடிகாரம்
என்ற சாதனையை படைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக