இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சருமத்தை குறிவைத்து தாக்கும் குளிர்காலம் வரவிருக்கிறது. சரும வறட்சி, உலர்ந்த
சருமம், உதடு வெடிப்பு என்று தொடர்ந்து சருமம் பாதிப்படைவதைத் தடுக்க வீட்டிலேயே முன்னெச்சரிக்கை
நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்கிறார்கள் சரும பராமரிப்பு நிபுணர்கள்.
குளிர்காலமும் சரும பராமரிப்பும்...
பருவ நிலை மாறும் போது முதலில் பாதிப்படைவது
சருமம் தான் என்கிறார்கள் சரும பராமரிப்பு நிபுணர்களும், அழகு கலை நிபுணர்களும்.
சருமத்தை முறையாக பராமரிப்பதன் மூலம் அழகாக மட்டுமல்ல ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
குளிர்காலம் தொடங்கிவிட்டது. சருமத்தை
வறட்சியிலிருந்து காத்துகொள்ள முன்னெச்சரிக்கை யாக பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள
வேண்டும். இல்லையெனில் வறண்ட சருமம், சோர் வான முகம், உதடு வெடிப்பு, வறட்சி போன்ற
பிரச்சனைகளை இயல்பாக சந்திக்க நேரிடும்.
இதற்காக வெளியிடங்களைத் தேடி ஓட வேண்டியதில்லை.
வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு சருமத்தை எளிதாக பராமரிக்கலாம்.
சருமமும், ஈரப்பசையும்...
குளிர்காலத்தில் சருமத்தின் ஈரப்பதம் குறைந்து
வறட்சியாக இருக்கும். இந்த நிலையில் உங்கள் சரு மம் பட்டுப்போல் மின்ன
என்னவெல்லாம் செய்யலாம் பார்க்கலாமா?
வறண்ட சருமத்தைப் பொலிவாக்க செய்வதில் பழங்கள்
துரிதமாக செயல்படுகிறது என்பதோடு எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.
ஆலிவ் ஆயில்
அதிகப்படியான வறட்சியைக் கொண்டி ருப்பவர்கள்
இரவு நேரங்களில் படுக்க செல்வதற்கு முன்பு வறட்சியான சருமத்தில் ஆலிவ் ஆயிலை தடவி
மசாஜ் செய்து வரவும். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து முகத்தை
சோர்விலிருந்து மீட்கும்.
சுத்தமான தேனும் பொலிவான சருமமும்...
தேன்
சுத்தமான தேனுடன் ஆலிவ் ஆயில், எலுமிச்சைச்சாறு
சம அளவு கலந்து நன்றாக குழைத்து வைக்க வும். ஐந்து நிமிடங்கள் கழித்து முகம்,
கழுத்துப் பகுதிகளில் கீழிருந்து மேலாக மசாஜ் போல் தடவி 20 நிமிடங்கள் கழித்து
மிதமான வெந்நீரில் முகம் கழுவி வந்தால் வறண்ட சருமம் நாளடவைல் மிருது வான சருமமாக
மாறும். சருமத்திலிருக்கும் இறந்த செல்கள் நீங்கி சருமம் பளிச்சென்று இருக்கும்.
வழவழப்பான மென்மை சருமத்துக்கு...
வாழைப்பழ
ஃபேஷியல்
வறண்ட சருமத்தை மென்மையாக்க செய்வதில்
வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. நன்றாக பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன்
தயிர், தேன் சேர்த்து முகத்துக்கு ஃபேஷியல் செய்தால் முகம் பொலிவுடனும்
ஜொலிப்புடனும் இருக்கும். வறட்சியைத் தடுத்து மென்மையாக வைக்க வாழைப்பழம் வேகமாகவே
செயல்படுகிறது.
இயற்கை பொருளில் மென்மையான சருமம்...
ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு தோலை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி
செய்து எடுத்து வைக்கவும். குளிர் காலத்தில் தேனில் ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு பொடியை
குழைத்து முகத்தில் ஃபேஸ் பேக் போல் போட்டு 20 நிமிடங் கள் கழித்து குளிர்ந்த
நீரில் கழுவினால் முகத்தின் வறட்சி நீங்கும். கூடுதலாக முகச்சுருக்கங்கள் நீங்கி
முகம் பளிச்சென்று இருக்கும்.
பப்பாளி
ஃபேஷியல்
நன்றாக பழுத்திருக்கும் நாட்டு பப்பாளிப்பழத்தை
மசித்து அதன் கூழை முகம், கழுத்து பகுதியில் தடவி அரைமணிநேரம் கழித்து மிதமான
நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் பொலிவாகும். முக வறட்சி நீக்குவதோடு சருமத்தில்
இருக்கும் இறந்த செல்களையும் நீக்கி பளிச்சென்று வலம் வர பப் பாளிப்பழம் ஃபேஸ்
பேக் சிறந்தது.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயைத் தோல் சீவாமல் மிக்ஸியில் மைய
அரைத்து அவற்றுடன் பசும்பால் குழைத்து முகத்தில் தடவி வரவேண்டும்.
வெள்ளரிக்காயுடன் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து தடவி வரலாம். இது சருமத்தின் பொலிவை
மீட்டு தரும். வறட்சியிலிருந்து காப்பாற்றும்.
பளிச் சருமத்துக்கு பாதாம்
பாதாம்
ஐந்து பாதாமை ஊறவைத்து தோல் உரித்து பசும்பால்
சேர்த்து மைய அரைத்து இதனுடன் கற்றா ழைச் சாறு, எலுமிச்சைச்சாறு, தேன் சேர்த்து
அரைத்து முகத்தில் ஃபேஸ் பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து மிதமான வெந்நீரில்
முகம் கழுவி வந்தால் வறண்ட சருமம் வளமான சருமமாக மாறி விடும்.
பளீர் சருமத்தை உறுதி செய்ய கற்றாழை ஜெல்...
கற்றாழை
இரவு நேரங்களில் படுக்கும் போது கற்றாழை மடலை
வெட்டி அதன் நுங்கு போன்ற பகுதியை எடுத்து முகம், கழுத்து பகுதிகளில் மசாஜ் போல்
நன்றாக தேய்த்து வரவும்.
கற்றாழையில் இருக்கும் வைட்டமின் சி, வைட்டமின்
இ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை சரு மத்திற்கு ஜொலிப்பை கொண்டு வரும். சருமத்தில்
இறந்த செல்களை நீக்கி சருமம் விரைவில் முதிர்ச்சியடைவதைத் தள்ளி வைத்து இளமையோடு
வைத்திருக்க உதவும்.
கற்றாழை தடவிய சருமம் எப்போதும்
புத்துணர்ச்சியாக பொலிவாக இருக்கும். இரவு நேரங்களில் மட்டுமல்ல நேரம் கிடைக்கும்
போதெல்லாம் பயன்படுத்துங்கள். பலனை விரைவில் உணர்வீர்கள்.
சரும சுத்தமும் பராமரிப்பும்
சருமத்தின் வறட்சிக்கு காரணம் ஈரப்பதம்
குறைந்து காணப்படுவதுதான். தாகம் இல்லாத காலத்தி லும் போதுமான அளவு தண்ணீர்
குடிக்க வேண்டும். அதிக கெமிக்கல் நிறைந்த சோப்பு பயன்படுத் துவதைத் தவிர்க்கவும்.
சோப்பு பயன்படுத்தினாலும் அதிக அளவு பயன்படுத்த வேண்டாம். சுத்த மான தண்ணீரால்
முகத்தை அவ்வபோது கழுவவும்.
தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு
பன்னீரில் பஞ்சை நனைத்து முகத்தில் இருக்கும் அழுக்கை துடைத்து எடுக்கவும். இது
சருமத்தின் நிற மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் என்பதோடு முகத்தில் இருக்கும் இறந்த
செல்களை நீக்கும். இயன்றால் மிருதுவாக ஸ்க்ரப் செய்தும் அழுக்கை நீக்கலாம்.
சருமதுவாரத்தில் அடைப்பட்டிருக்கும் அழுக்குகள்
வெளியேறினாலே சருமம் பளிச்சென்று இருக்கும். உரிய பராமரிப்பின் முலம் சருமத்தை
வறட்சியிலிருந்தும் காக்கலாம்.
வறட்சியில்லாத சருமம்..
தினமும் குளித்து முடித்ததும் முகத்துக்கு
தரமான மாய்ஸ்சுரைசர் க்ரீம் உபயோகிப்பதும் நல்லது. எப்போதும் சருமத்தில் தூசி,
அழுக்குகள் தங்காமல் பார்த்து கொண்டாலே போதும். அப்படி செய்தாலே சருமத்தில்
இருக்கும் இறந்த செல்கள் நீங்கி சருமம் மேலும் வறட்சியடையாமல் பொலி வாக இருக்கும்.
எல்லா காலங்களிலும். குறிப்பாக வறண்ட
காலங்களிலும் கூட.. சருமத்தைப் பராமரியுங்கள். அழகுடன் ஆரோக்கியமாய் இருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக