இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அடர்ந்த காட்டில் ஒரு கர்வம் கொண்ட சிங்கம் வாழ்ந்து வந்தது. நான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்ற கர்வத்துடன் அந்த சிங்கம் காட்டில் வாழ்ந்த அனைத்து மிருகங்களையும் வேட்டையாடி சாப்பிட்டது.மற்ற சிங்கங்கள் உணவுக்காக வேட்டையாடி வந்தது. ஆனால் இந்த சிங்கம் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடியது. இதனால் காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீது கோபம் கொண்டன. ஒவ்வொரு நாளும் சிங்கம் பல மிருகங்களை வேட்டையாடியது. இதனை கண்ட மற்ற மிருகங்கள் அதிக பயத்துடன் வாழ்ந்து வந்தன.
சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொரு நாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தது. சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்கு நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன.
அடுத்தநாள் குரங்கு ஒன்று கர்வம் கொண்ட சிங்கத்தை சந்திக்க அதன் குகைக்கு சென்றது. இதைக்கண்ட சிங்கம் மிகுந்த கோபத்துடன் உறுமியது. குரங்கிற்கு பயம் வந்துவிட்டது. சிங்கம் குரங்கை பார்த்து, உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் குகைக்கு வந்திருப்பாய்? என்றது. அதற்கு குரங்கு, எல்லா மிருகங்களும் தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அதனால் சிங்கராஜா இரை தேடி அலையத் தேவையில்லை என்று கூறியது.
அதற்கு சிங்கம் ஏன் இந்த முடிவு? என்று கேட்டது. தினம் தினம் எந்த மிருகம் உங்களால் வேட்டையாடப்படும் என்ற பயத்துடன் வாழ்வதை விட, தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வந்தால் மற்ற மிருகங்கள் பயமின்றி சிறிது காலம் வாழலாம் என்றது. அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோம். பின்பு உங்களுக்கு உணவு கிடைக்காமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றது.
இதனை கேட்ட சிங்கராஜாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மேலும் குரங்கிடம் தவறாமல் தினமும் காலையில் ஒரு மிருகம் கண்டிப்பாக வரவேண்டும். இல்லையென்றால் அனைவரையும் வேட்டையாடி விடுவேன் என்று கூறியது. அன்றிலிருந்து தினம் ஒவ்வொரு மிருகமாக சிங்கத்திற்கு இரையாகச் சென்றது. ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாக சென்றது. அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது. சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாக வந்தாய் என கர்ஜனை செய்தது.
அதனைக் கேட்ட முயல் நடுக்கத்துடன் சிங்கராஜா நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை வேட்டையாட முயற்சி செய்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வருகிறேன் என்றது. என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது. அதற்கு முயல், சிங்கராஜா வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்து சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள் தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது. அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பார்த்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ஜனை செய்தது.
பிம்பமும் கர்ஜனை செய்தது. சிங்கத்திற்கு ஆத்திரம் பொங்கியது. இதோ பார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. அதனால் அந்த சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது. முயல் துள்ளிக்குதித்து வெற்றியை மற்ற மிருகங்களிடம் சென்று கூறியது. காட்டில் அனைத்து மிருகங்களுக்கும் கொண்டாட்டம் தொடங்கியது. முயலின் சமயோசித முயற்சியால் மற்ற மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.
நீதி:
முயற்சியும், திறமையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக