>>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 27 நவம்பர், 2019

    திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில்!

     Image result for திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்! 



    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Join Our Telegram Channel

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    திருநள்ளாறு என்றாலே நம் நினைவுக்கு வருவது சனி பகவான் தான். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்பர். அவ்வளவு சக்தி கொண்ட சனி பகவானின் மிகவும் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த சனீஸ்வரன் கோவில் அமைந்துள்ள இடம் தான் திருநள்ளாறு.

    மூலவர் : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்.
     தாயார் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்.
    ஊர் : திருநள்ளாறு.

    தல வரலாறு :
     திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 52ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேரு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரச்சனை தீரும். நளதீர்த்ததில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்பானேசுவரர் வழிபட்டு பேரு பெருகின்றனர். இத்தலம் நாசாவின் ஒரு விண்கலத்தை ஸ்தம்பிக்க வைத்ததாம்.
     திருநள்ளாறு கோவிலுக்கு ஒரு காலத்தில் ஆதிபுரி என்பது பெயராகும். அங்குள்ள சிவனை வழிபட்டு பிரம்மா பரிகாரம் பெற்றதாக ஸ்தலபுராண வரலாறு சொல்கிறது. பிரம்மதேவர் பூஜித்த சிவனுக்கு தர்ப்பாரண்யேஸ்வரர் என்பது பெயராகும். இங்குள்ள ஸ்தல விருட்சம் தர்ப்பை ஆகும்.
     திருநள்ளாற்றிற்கு மிக சுவாரஸ்யமான வரலாறு உண்டு. பச்சைப் படிகம் என்ற கீர்த்தனைகள் மூலம் திருநள்ளாறு குறித்த வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. சைவ சமய பாரம்பரியம் கொண்ட இவ்வூர் மக்கள், ஜெயினர்களின் வருகையால் அவர்களின் சமயத்தின்பால் ஈர்க்கப்பட்டனர்.
     அந்த நகரத்தை ஆண்ட ராஜாவோ இத்தகைய மாற்றத்தை விரும்பவில்லை. மாறாக, அந்த நகரத்தின் பாரம்பரிய சமயமான, சைவ சமயத்தை நிறுவ விருப்பம் கொண்டிருந்தார்.
     அப்போது, சைவத் துறவியான திருஞான சம்பந்தரின் சிறப்புக்களைப் பற்றி கேள்விப்பட்ட அரசர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அதன் பேரில் அரசரின் அழைப்பை ஏற்று இங்கு வந்த திருஞான சம்பந்தர், அரசருக்கு நீண்ட காலமாக இருந்த உடல் கஷ்டங்களை தன் விசேஷ சக்திகளை கொண்டு குணமாக்கினார்.
     இது அந்நகரம் முழுக்க பரவ ஆரம்பித்தது. அதுமட்டுமல்லாமல் திருஞான சம்பந்தர், மக்களின் துன்பங்களையும் நீக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். திருஞான சம்பந்தரின் புகழ் நகரம் முழுவதும் பரவியது.

    திருஞான சம்பந்தரின்பால் ஈர்க்கப்பட்டு, மக்கள் சைவ சமயத்தைத் தழுவ ஆரம்பித்தனர். இதனைக் கண்ட ஜெயின் சமயத்தினர், சம்பந்தரை போட்டிக்கு அழைத்தனர். அதில் வெற்றி பெற்ற சம்பந்தர், அங்கு மறுபடியும் சைவ சாம்ராஜ்யத்தை நிறுவ பெரும் பணியாற்றினார். இதன் தொடர்ச்சியாக, எழுந்தது தான் திருநள்ளாறு கோவில்.

    தலச்சிறப்பு :
     சனி பார்வையில் உள்ள பக்தர்கள் இத்தலத்திற்கு சென்று எள்ளுடன் கூடிய தீபம் ஏற்றி அன்னதானம் செய்தால் சனிபகவான் அருள் பரிபூரணமாக கிட்டும். இத்தலத்தில் பூஜைசெய்து மேன்மை பெற்ற நளமன்னரால் திருநள்ளாறு என்ற பெயரைக் கொண்டு சிறப்புடன் விளங்குகிறது. தோஷ நிவர்த்தி தரும் பரிகார தலம்.
     திரு நள ஆறு என்பது திருநள்ளாறு என்று ஆனது. இதில் 'நள" எனும் சொல் நளச் சக்ரவர்த்தியை குறிக்கிறது. அவர் இக்கோவிலில் வந்து வழிபட்டு, சனி தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
     இதன் காரணமாக நளச் சக்ரவர்த்தியின் துயரை ஆற்றிய ஊர் என்பதால் திருநள்ளாறு என பெயர் பெற்றது. பாண்டிச்சேரியில், காரைக்கால் அருகே அமைந்துள்ள திருநள்ளாறு, நவகிரஹ ஸ்தலங்களில் ஒன்று.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக