இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்த பூமி மர்மங்களின் தேசம். அந்த மர்மங்கள் தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றன. எத்தனையோ பேர் விடுவிக்க முயன்றும் முடியாமல் போக்குக் காட்டும் மர்மங்கள் வியக்க வைக்கின்றன. அப்படி விரவிக் கிடக்கும் நூற்றுக் கணக்கான மர்மங்களில் பத்து மர்மங்கள் இவை.
1.வாய்னிச் எழுத்துகள்
பதினைந்தாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டதாகக்
கருதப்படும் ஒரு நூல் இது. படங்களும், எழுத்துகளும், குறியீடுகளும் நிரம்பியிருக்கும்
240 பக்க நூல். இந்த நூல் சொல்ல வரும் விஷயம் என்ன என்பதை யாராலும் புரிந்து கொள்ள
முடியவில்லை.
இடமிருந்து வலமாக, மிகத் தெளிவாக படங்களோடு
எழுதப்பட்டிருக்கிறது இந்த நூல். ஆனால் அப்படி ஒரு மொழி எங்கும் இருந்ததேயில்லை.
இது ஏலியன் புத்தகமாக இருக்கலாம் என ஒரு
சாரார் நினைக்கின்றனர். இல்லையில்லை, இது மிகப்பெரிய தத்துவ நூல். இதைப் புரிந்து கொள்ளும்
போது உலகமே வியந்து பார்க்கும் தத்துவ சிந்தனைகள் கிடைக்கும் என சிலர் வாதிடுகின்றனர்.
அப்படியெல்லாம் இல்லை இது உலகின் பசுமைப் புரட்சிக்கான ஒரு மாபெரும் விதை. விவசாயம்,
மருத்துவம் போன்ற அனைத்து விஷயங்களையும் விளக்குகின்ற மாபெரும் புத்தகம் என மற்றொரு
சாரார் கருதுகின்றனர்.
இதெல்லாம் யாரோ விளையாட்டுக்காக கிறுக்கி
வைத்த நூல், தேவையில்லாம பணமும் நேரமும் செலவிடாதீங்க என வேறு சில அறிஞர்கள் கருத்து
தெரிவிக்கின்றனர்.
இந்த நூல் ஏதேனும் வியப்புகளைக் கொண்டு
வருமா, அல்லது புஸ்வாணமாய் போகுமா என்பது புதைந்து கிடக்கும் அதன் புரியாத வார்த்தைகளுக்குத்
தான் தெரியும்.
2.
பெர்முடா முக்கோணம்
மர்மங்களைப் பற்றிப் பேசும்போது பெர்முடா
முக்கோணத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. சாத்தானின் முக்கோணம் என்றும் இதை
அழைப்பார்கள்.
வட அட்லாண்டிக் கடற்பகுதியிலுள்ள மிகப்பெரிய
இடம் அது. பதின்மூன்று இலட்சம் சதுர கிலோ மீட்டர் முதல் முதல் நாற்பது இலட்சம் வரையிலானது.
இந்த எல்லைக்குள் வருகின்ற விமானங்கள், கப்பல்கள் பலவும் மாயமான முறையில் காணாமல் போய்விடுவது
தான் நீடிக்கின்ற மர்மம்.
மோசமான வானிலையாய் இருக்கலாம் என்றும்,
ஏலியன்கள் கடத்திச் சென்றதாக இருக்கலாம் என்றும், அந்த இடம் டைம் மெஷின் போல செயல்பட்டு
விமானங்களை ஏதோ ஒரு ஆண்டுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்றும், அந்த இடத்தில் ஏதேனும்
இயற்பியல் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் ஆளாளுக்கு ஒரு கதையைச் சொல்கின்றனர்.
மிரட்டும் பல்வேறு கதைகளின் தொகுப்பாக
இருக்கிறது பெர்முடா முக்கோணம்.
3. மர்மப் பெண்
1963ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியா ஜான்
எஃப் கென்னடி கொலை செய்யப்பட்டார். அவருடைய கொலை நடந்த நிகழ்வுகளை ஆய்வு செய்த போது
புகைப்படங்களில் ஒரு பெண் தென்பட்டார். ரஷ்யப் பெண்கள் அணிவது போன்ற ஒரு ஆடையை அவர்
அணிந்திருந்தார்.
கொலை நடந்தபோது மக்கள் அலறி அடித்துக்
கொண்டு சிதறி ஓடினார்கள். இவரோ அசால்டாக நின்று கொண்டு தன்னிடமிருந்த கேமராவினால் காட்சிகளைப்
பதிவு செய்து கொண்டே இருந்தார். நிறைய இடங்களில், நிறைய கோணங்களில் அவர் தென்பட்டார்.
அந்தப் பெண் யாரென கண்டுபிடிக்க ஆளானப்
பட்ட அமெரிக்கா தலைகீழாக நின்றும் முடியவில்லை. அவர் யார், அந்தக் கொலையோடு அவருக்குத்
தொடர்பு உண்டா ? என்பது இன்று வரை விடுபடாத மர்மமாகவே இருக்கிறது.
4.பிரிட்ஜ் வாட்டர் முக்கோணம்
அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில்
சுமார் ஐநூற்று இருபது சதுர கிலோமீட்டர்கள் கொண்ட ஒரு மர்ம இடம் இருக்கிறது. இந்த இடத்தைப்
பற்றி வருகின்ற கதைகள் சிலிர்க்கவும், பயப்படவும் வைக்கின்றன.
பெரும்பாலான கதைகள் ஏலியன் தொடர்பானவை.
திடீரென தோன்றுகின்ற மிகப்பிரகாசமான ஒளிப்பந்து, அந்த இடத்திற்கு நேராக வானில் தெரியும்
வெளிச்சம், அசையும் நெருப்பு உருவங்கள் என நேரடியாகப் பார்த்த சாட்சிகள் எக்கச்சக்கம்.
மிகப்பெரிய காலடித் தடங்கள் இந்தப் பகுதியில்
தோன்றி அடிக்கடி மிரள வைக்கின்றன. மனிதனும், மனிதக் குரங்கும் கலந்த ஆஜானுபாகுவான
உருவத்தைக் கண்டவர்கள் உண்டு. மிரட்டலான டிராகன் போன்ற பறவையைப் பார்த்தவர்கள் உண்டு.
இறகுகள் பன்னிரண்டு அடி வரை நீளமான வித்தியாசமான பறக்கும் ஜந்துக்களைக் கண்டவர்கள்
உண்டு.
பதட்டத்தின் பதுங்கு குழியாகவே இன்றும்
இருக்கிறது இந்த இடம்.
மேற்கு ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள இந்த
மினார் ஒரு வரலாற்று மர்மத்தைச் சுமந்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சுமார்
அறுபத்தைந்து மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மினார் 1190ம் ஆண்டு கட்டப்பட்டது.
சுட்ட செங்கற்கள், மண் போன்றவற்றால் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கிறது.
இத்தனை ஆண்டுகள் தாண்டியும், இன்னும் நிமிர்ந்து
நிற்பது இதன் கட்டிடக்கலையை வியக்க வைக்கிறது. 2002ம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரியக் களமாக
அறிவிக்கப்பட்ட இந்த கட்டிடத்தில் இஸ்ராமியர்களின் புனித நூலான குரானிலிருந்து வாசகங்கள்
குறிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவின் குதுப்மினார் இதை விடப் பெரியது
என்றாலும், ஜாம் மினாரின் வேலைப்பாடுகள் சிறப்புக் கவனம் பெறுகின்றன. இது அழிந்து போன
நாகரீகத்தின் அடையாளமா, அல்லது இறைவனைப் புகழ்வதற்காக இஸ்லாமிய மன்னர் அமைத்ததா எனும்
கேள்விகள் இதைச் சுற்றி இருக்கின்றன.
மிகப்பெரிய மலைகளுக்கு நடுவே பூமியின்
ஆச்சரியக் குறி போல நிமிர்ந்து நிற்கும் இந்த மினார் தனக்குள் வரலாற்று மர்மத்தை ஒளித்தே
வைத்திருக்கிறது.
6.தி எமரால்ட் டேப்லெட்
தொட்டதெல்லாம் பொன்னாகும் கதை படித்திருப்பீர்கள்.
எந்த ஒரு உலோகத்தையும் பொன்னாக மாற்றும் ஆல்கமி எனப்படும் ரகசியம் தான் இந்த எமரால்ட்
எழுத்துகளில் இருந்த ரகசியம். “தத்துவ ஞானியின் கல்” எனப்படும் ஒரு பொருளைக் குறித்த
ரகசியம் இதில் உண்டு. அது தான் உலோகங்களை பொன்னாக மாற்றும் வித்தையின் முக்கிய அம்சம்.
ஆறாம் நூற்றாண்டுக்கும், எட்டாம் நூற்றாண்டுக்கும்
இடைபட்ட காலத்தில் அரேபிய மொழியில் உருவான நூல் இது. இந்த எழுத்துகளைக் குறித்த செய்திகளும்,
இந்த நூலில் மொழிபெயர்ப்புகளும் மிஞ்சினாலும் இதன் ஒரிஜினல் இப்போது எங்கே இருக்கிறது
என்பது மர்மமாகவே இருக்கிறது. இந்த காலத்தில் இதன் ரகசிய முடிச்சை அவிழ்க்க பலர் முயன்றனர்.
ஆனால் யாரும் வெற்றியடையவில்லை.
இந்த ரகசியத்தைக் கண்டுபிடிப்பவர் உலகையே
விலைபேசி விட முடியும் என்பதால் இந்த மர்மத்தின் மீதான தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
7.உறைந்த மனிதர்கள்
இரண்டு பேர் ஒரே மாதிரி ஒரு செயலைச் செய்தாலே,
“என்னப்பா ஒரே மாதிரி செய்றே” என்பார்கள். ஒரு கூட்டம் மக்கள் தங்களை அறியாமலேயே அப்படி
செய்யும் மர்மம் அடிக்கடி நிகழ்கிறது.
2007ம் ஆண்டு நியூயார்க் நகரின் கிரான்ட்
சென்ட்ரல் டெர்மினல் ரயில் நிலையத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது. மிகச் சரியாக மணி
2:30 என்றபோது சுமார் இருநூறு பேர் நின்ற இடத்தில், செய்து கொண்டிருந்த வேலையில் அப்படியே
உறைந்து நின்றார்கள். முழுதாக ஐந்து நிமிடங்கள் அவர்கள் சிலையைப் போல நின்றார்கள்,
மற்றவர்கள் தங்கள் பணியை வழக்கம் போல செய்து கொண்டிருந்தனர்.
அமெரிக்கா மட்டுமல்லாமல், பெல்ஜியம், பிரிஸ்டன்
இங்கிலாந்து என பல இடங்களில் நடந்த இதே போன்ற மர்ம நிகழ்வை மருத்துவர்கள் “மாஸ் ஹிஸ்டீரியா”
என்கின்றனர். ஆனாலும் இந்த மர்மத்தின் உண்மையான காரணம் என்ன என்பது முடிச்சவிழ்க்கப்
படாமலேயே இருக்கிறது.
மெக்சிகோ அருகில் இருந்த ஒரு தீவு பெர்மேஜோ.
1970 களில் உயிர்ப்புடன் இருந்த தீவு அடுத்த இருபது ஆண்டுகளுக்குப் பின் சட்டென காணாமல்
போய்விட்டது. அந்த தீவுடன் சேர்ந்து அந்த தீவு தொடர்பான தகவல்களும், அதிலே இருந்த எண்ணை
வளங்கள் பற்றிய தகவல்களும் மாயமாகிவிட்டன.
1535 க்கும், 1775 க்கும் இடைப்பட்ட காலத்திலுள்ள
வரைபடங்களில் இந்த தீவு இருக்கிறது, பின் காணாமல் போய் விட்டது. அதன் பின் 1800களின்
பிற்பகுதியில் மீண்டும் காணப்பட்டது, இப்போது மீண்டும் மாயமாகியிருக்கிறது ! அந்த தீவு
எங்கே போச்சு என்பதைக் கண்டு பிடிக்க மெக்சிகன் அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து நடத்திய
தேடுதல் வேட்டைகளில் எந்த பயனும் கிடைக்கவில்லை.
இதிலுள்ள எண்ணை வளங்களுக்காக இந்த தீவு
திட்டமிட்டே மறைக்கப்பட்டதா ? அல்லது இது மிதந்து மிதந்து மூழ்கும் ஏதேனும் விசித்திரத்
தீவா ? அல்லது அப்படி ஒரு தீவு இருந்ததே ஒரு தோற்ற மயக்கமா எனும் மர்மக் கேள்விகளுக்கு
விடை இன்னும் கிடைக்கவில்லை.
9.ஸ்டார்ரி நைட்
ஓவியத்தில் கரைகடந்த வான்கோவின் மிகப்பிரபலமான
ஓவியம் ஸ்டார்ரி நைட். 1889ம் ஆண்டு இதை அவர் வரைந்தார். அப்போது அவருக்கு காது கேட்காது.
எனவே அவர் ஒரு ஆலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தார். அங்கே அவர் தங்கியிருந்த 54 வாரங்களில்
240 ஓவியங்களை வரைந்து தள்ளினார் அவற்றில் ஒன்று தான் இந்த ஸ்டார்ரி நைட்.
அவருடைய ஓவியத்தில் இருப்பது என்னவென்பதை
யாரும் அறிந்து கொள்ளவில்லை. அது அவருடைய கற்பனையில் வெளிப்பாடு என்று தான் நினைத்தார்கள்.
2006ம் ஆண்டு மெக்சிகோ பல்கலைக்கழகம் அந்த பெயின்டிங்கை ஆய்வு செய்தபோது தான் அதிர்ச்சியளிக்கும்
பல விஷயங்கள் தெரிய வந்தன.
அந்த பெயின்டிங் “கொந்தளிப்பை” ப் பற்றியது.
1940 வரை அறியப்படாமல் இருந்த கொந்தளிப்பின் நுணுக்கங்களை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே
மிகத் துல்லியமாக அந்த படத்தில் வரைந்திருந்தார். சின்ன கணிதப் பிழை கூட அதில் இல்லை.
வான்கோ எப்படி அந்த ஓவியத்தை வரைந்தார்
? எப்படி அவருக்கு அந்த கண்டுபிடிக்கப்படாத நுணுக்கங்கள் தெரிந்திருந்தன ? வான்கோவின்
ஓவியங்களைப் போலவே அந்த மர்மமும் ஒளிந்தே இருக்கிறது.
10 ஸ்ரௌட் ஆஃப் டுரின்
இது ஒரு லினன் துணியில் பதிந்திருக்கும்
ஒரு முகம். சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒரு மனிதனின் முகம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் இது இயேசுவின் உடலைச் சுற்றியிருந்த கல்லறைத் துணி என
நம்புகின்றனர். இத்தாலியிலுள்ள திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் இப்போது இந்த துணி இருக்கிறது.
ஏராளமான அறிவியல் ஆய்வுகள் நடந்தாலும்
இதன் மர்மம் விலகவில்லை. எப்படி இந்த முகம் துணியில் பதிந்தது, ஏன் அழியாமல் இருக்கிறது
எனும் கேள்விகள் முடியவில்லை. இதே போன்ற ஒன்றை உருவாக்க நினைத்த முயற்சிகள் எல்லாம்
தோல்வியில் முடிந்திருப்பது மர்மத்தை இன்னும் விரிவாக்குகிறது. இன்றும் பல்வேறு மர்மங்களையும், வியப்புகளையும்
ஒளித்து வைத்துக் கொண்டு புதிர்களின் வரைபடமாய் இருக்கிறது இந்த துணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக